நடிகை ராஜஸ்ரீயிடம் நூதன முறையில் கொள்ளையடித்த நபர் கைது: நகைகள் பறிமுதல்
சென்னை: பழம்பெரும் தமிழ் சினிமா நடிகை ராஜஸ்ரீயிடம் இருந்து, ரோலக்ஸ் வாட்ச், தங்க நகைகள் போன்றவற்றை நூதனமுறையில் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்திருப்பவர் ராஜஸ்ரீ. இவர் கடந்த செவ்வாயன்று தனது மகனுடன் சென்னை தி.நகரில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சென்று, லாக்கரில் வைத்திருந்த ரோலக்ஸ் வாட்ச், பழமையான தங்க, வைர நகைகள் போன்றவற்றை எடுத்துவந்தார்.

வீடு திரும்பும் முன்பாக, காரில் தனியாக இருந்த ராஜஸ்ரீயிடம் இளைஞர் ஒருவர் சாலையோரம் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகளை காட்டி, அவருடைய பணமா எனக் கேட்டுள்ளார்.
உடனே பணத்தை எடுப்பதற்காக, ராஜஸ்ரீ காரை விட்டு, கீழே இறங்கியபோது, அந்த இளைஞர் காருக்குள் வைத்திருந்த நகைகள், ரோலக்ஸ் வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றார். காரில் வைத்திருந்த நகைகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த ராஜஸ்ரீ, இது தொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமிரா காட்சிகளை அடிப்படையாக வைத்து, போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்படி, திருச்சியை சேர்ந்த சர்ஃபுதின் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து, ராஜஸ்ரீக்குச் சொந்தமான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications