சேலம் - சென்னை 8 வழிசாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு.. மத்திய மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சேலம் - சென்னை இடையேயான எட்டு வழி சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை சேலம் - சென்னை இடையேயான எட்டு வழி சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேலம் - சென்னை இடையிலான எட்டுவழி பசுமை சாலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து சென்னையை வந்தடைகிறது.
இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

8 வழிசாலைக்கு எதிர்ப்பு
இந்நிலையில் சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூர்யபிரகாசம் என்பவர் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீர்நிலைகளுக்கு பாதிப்பு
அவர் தனது மனுவில் தெரிவித்திருப்பதாவது, மரங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்தும் முன் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தண்ணீர் பஞ்சம்
சேலம் - சென்னை இடையிலான மாவட்டங்களில் ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. காடுகளை அழித்து தார்ச்சாலை அமைத்தால் மிகப்பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

ஹைகோர்ட் நோட்டீஸ்
எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான விவசாயிகள் வேலையிழப்பார்கள். இவ்வாறு சூர்யபிரகாசம் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேர்த்து விசாரிக்கப்படும்
ஜூலை 12ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக பதில் அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications