ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து மேலும் ஒரு டாக்டர் வருகை? பரபரக்கும் அப்பல்லோ
சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க மீண்டும் லண்டனிலிருந்து டாக்டர் ரிச்சர்ட் பியெல் சென்னை வந்த நிலையில், மற்றொரு டாக்டரையும் அவர் உடன் அழைத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஸ்பெஷஸிஸ் லண்டனை சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஜான். இவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வரவழைக்கப்பட்டிருந்தார். முதல்கட்ட சிகிச்சையை முடித்துவிட்டு கடந்த 2ம் தேதி ரிச்சர்ட் இங்கிலாந்து திரும்பிவிட்டார். அங்கு அவர் அப்பாயின்மென்ட் கொடுத்த சில அவசர பிரிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார்.

அந்த பணிகளை முடித்துக்கொண்டு, உடனடியாக திரும்பி வருமாறு அப்பல்லோ நிர்வாகமும், சசிகலா உறவினர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மறுபடியும் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொடர்பான தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க ரிச்சர்ட் மற்றும் அவரது குழுவினர் நேற்று சென்னைக்கு வந்தனர்.
இந்நிலையில் லண்டனிலிருந்து கூடுதலாக ஒரு சிறப்பு மருத்துவரும், அப்பல்லோ வந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது பெயர் விவரம் இன்னும் வெளியாகவில்லை. இவரும் சிறப்பு நிபுணர் என்று கூறப்படுகிறது. அனேகமாக அப்பல்லோ இன்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிடும், அப்போது இதுகுறதித்த தகவல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications