தினகரன் அணியில் மேலும் ஒரு எம்எல்ஏ.. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளதா?
Recommended Video

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து தினகரன் அணிக்கு அதிமுகவில் இருந்து கூடுதலாக ஒரு எம்எல்ஏ சென்றுள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கான ஆதரவு குறைந்துவிட்டது.
தினகரன் அணிக்கு ஆதரவு அளித்ததற்காக 18 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் ஹைகோர்ட்டில் மனு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாக உள்ள நேரத்தில்தான் புதிதாக ஒரு எம்எல்ஏ ஆதரவு தினகரனுக்கு கிடைத்துள்ளது.

தகுதி நீக்க வழக்கு
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் எடப்பாடி அணி பெரும்பான்மையுடன் உள்ளது. ஒருவேளை அவர்கள் தகுதி நீக்கம் செல்லாது என்றால், தினகரன் தலைமையை ஏற்று எடப்பாடி-பன்னீர்செல்வம் அணி அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை அத்தரப்பு முன் வைக்கும். அல்லது ஆட்சியை கலைப்போம் என எச்சரிக்க வாய்ப்புள்ளது.

23ஆக உயரும்
கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய அதிமுக ஆதரவு 3 எம்எல்ஏக்களும் தினகரனுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஆர்.கே.நகரில் ஆளும் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து தினகரன் அபார வெற்றி பெற்றுள்ளார். இதையெல்லாம் கணக்கில் வைத்து பார்த்தால், தினகரனுடன் சேர்ந்து அவரது அணியில் 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என அறிவிக்கப்பட்டால், இந்த எண்ணிக்கை 23ஆக உயரும்.

பெரும்பான்மைக்கு தேவை
பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், எடப்பாடி அணிக்கு 111 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கும் சூழல் உருவாகும். எனவே ஆட்சி கலைந்துவிடும். ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி அணிக்கு குறைந்தது 7 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. தினகரன் அணியினருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால்தான் இந்த நிலை. ஒருவேளை எதிராக தீர்ப்பு வெளியானால், எடப்பாடி அரசு பாஸ்.

ஷாக் ட்ரீட்மென்ட்
எனவே மேலும் பல ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க தினகரன் திட்டமிடுவார். ஆனால், சபாநாயகர் தங்கள் பதவியை பறித்துவிட வாய்ப்புள்ளதால் உடனடியாக அதிக எம்எல்ஏக்கள் அவர் பக்கம் போக வாய்ப்பில்லை. இப்போதுள்ள அரசியல் சூழலில், தினகரன் மறக்கப்பட்டு வருவதால், கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை அழைத்து பரபரப்பு செய்தியாக்க முயன்றுள்ளார் தினகரன் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications