டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு
டிடிவி தினகரனுக்கு ஏற்கெனவே 27 எம்எல்ஏ-க்கள் உள்ள நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சென்னை: டிடிவி தினகரன் திகார் சிறையில் இருந்து வெளி வந்துள்ள நிலையில் அவரை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸும், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதியும், திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஜாமீன் பெற்று கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிலையில் அதிமுக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு என்றும் தெரிவித்தார்
தினகரன், சசிகலா ஆகியோரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக தெரிவித்திருந்த அமைச்சர் ஜெயகுமாருக்கு செக் வைக்க தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் போர்க் கொடி உயர்த்தினர். இதுதொடர்பாக ஆலோசனை நடத்த சசிகலாவை சிறைக்கு சென்று டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.

ஜெயக்குமார் ஆலோசனை
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் ஜெயகுமார் அறையில் 20 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தனர்.

தினகரனை விலக்கி வைக்க முடிவு
முதல்வரை சந்தித்த பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தினகரனை விலக்கி வைப்பது என்ற முடிவிலிருந்து பின்வாங்கு்ம பேச்சுக்கை இடமில்லை. அவர்களை சார்ந்து யாரும் இல்லை. அவர்களை கட்சியினர் யாரும் சந்திக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவு எம்எல்ஏ-க்கள்
இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், கதிர்காமம் உள்ளிட்ட 27 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்து விடும் என்று கருதப்படுகிறது.

மேலும் 3 எம்எல்ஏ-க்கள் சந்திப்பு
இந்நிலையில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் தினகரனை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 30-ஆகியுள்ளது. மேலும் சில எம்எல்ஏ-க்கள் தினகரன் பக்கம் சாயலாம் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications