தினகரனுக்கு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகே போஸ் ஆதரவு... எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு
டிடிவி தினகரனுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏகே போஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேனி: டிடிவி தினகரனை தேனியில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகே போஸ்.
அதிமுகவின் இரு அணிகளும் கடந்த திங்கள்கிழமை ஒன்றாக இணைந்தன. தினகரனையும், சசிகலாவை ஒதுக்கிவைக்க நிர்பந்தித்துவிட்டு ஓபிஎஸ் கட்சிக்கு மீண்டும் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் 19 பேரும் புதுவையில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். தாங்கள் அளித்த மனுவுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரையில் விடுதியிலேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தினகரனுக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதியும், விருத்தாசலம் எம்எல்ஏ கலைசெல்வனும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 21-ஆக இருந்தது.
இந்நிலையில் தேனியில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே. போஸ் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்தது.
இதுகுறித்து போஸ் கூறுகையில் சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சி செய்ய முடியாது. தினகரன் அணிக்கு மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்றார் போஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications