காங்கிரஸிலிருந்து 3வது வாசன் ஆதரவு தலைவர் ராஜினாமா
சென்னை: மேலும் ஒரு ஜி.கே.வாசன் ஆதரவு தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இவர் ராஜேஷ் சேவதாள அமைப்புச் செயலாளராக இருந்து வந்தவர். தற்போது விலகியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அட்டையில் காமராஜர் புகைப்படமும், மக்கள் தலைவர் மூப்பனார் புகைப்படமும் அச்சிட்டு இருந்தததை அனுமதிக்காத செயல் லட்சக்கணக்கான தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுக்கு எதிராக இருக்கிறது.
எனவே காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி உள்ளார்.
இது தொடர்பாக ராஜேஷ், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி மற்றும் தேசிய சேவாதள தலைவர் மகேந்திர ஜோஷிக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ஞானதேசின், பொருளாளர் கோவை தங்கம் ஆகியோர் பதவியிலிருந்து விலகினர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications