ரஜினிகாந்த் அரசியல் வருகையால் எந்த கட்சிக்கு அதிகம் பாதிப்பு? 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள் கருத்து
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எந்த கட்சிக்கு லாபம் அதிகம் என்று 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். புதுக் கட்சி துவங்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும், அவர் அறிவித்தார்.
ரஜினிகாந்த் ஒரு பிரபல நட்சத்திரம் என்பதால் அவரது வருகை தமிழக அரசியலில் அதிர்வை ஏற்படுத்தும் என்றுதான் பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.

பாதிப்பா என கேள்வி
இதுகுறித்து, நமது வாசகர்கள் கருத்தை அறிந்துகொள்ள, வெப்சைட்டில் ஒரு கருத்து கணிப்பை நடத்தினோம். அதில், ரஜினிகாந்த் அரசியல் வருகையால் அதிக பாதிப்பு எந்த கட்சிக்கு? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

பதில்கள்
திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் மற்றும் எந்த கட்சிக்கும் இல்லை என்பது போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன. மற்றொரு பெரிய கட்சியான காங்கிரஸ், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் அதுகுறித்து தனியாக கொடுக்கப்படவில்லலை.

அதிமுகவுக்கு அதிக பாதிப்பு
இதில், திமுகவுக்கு பாதிப்பு என்று 20.34 சதவீதம் வாசகர்கள் கருத்து கூறியுள்ளனர். ஆளும், அதிமுகவுக்கே பாதிப்பு என்று, 22.55 சதவீத வாசகர்கள் கூறியுள்ளனர். பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று 2.69 சதவீதம் பேர் கூறியுள்ளனர். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று 4.66 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதில் பாதிப்பு என்பது, அவர்களின் வாக்குகளை ரஜினி கட்சி சிதறடிக்கும் வாய்ப்பு என்ற பொருளில் புரிந்துகொள்ள தக்கது.

எந்த கட்சிக்கும் இல்லை
இதில் சுவாரசியம் என்றவென்றால், கடைடசி ஆப்ஷனான, எந்த கட்சிக்கும் இல்லை என்பதற்கே அதிக வாசகர்கள் வாக்களித்துள்ளனர். 49.75 சதவீதம் வாசகர்கள் இந்த ஆப்ஷனுக்கு வாக்களித்துள்ளனர். இவர்கள் கருத்துப்படி தமிழக அரசியலில் ரஜினிகாந்த்தின் கட்சி எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications