தென் இந்தியாவிலேயே சிறந்த அரசியல்வாதிகள் கொண்ட மாநிலம் எது? 'ஒன்இந்தியாதமிழ்' சர்வே ரிசல்ட் பாருங்க
சென்னை: தென் இந்தியாவிலேயே சிறந்த அரசியல்வாதிகளை கொண்ட மாநிலம் எது என்ற கேள்விக்கு 'ஒன் இந்தியா தமிழ்' வாசகர்கள் சுவாரசியமான பதிலை அளித்துள்ளனர்.
தென் இந்தியாவின் வரிப் பணத்தில் வட இந்தியா வாழ்ந்து வருவதாக கலக குரல்களை ஆந்திரா, கர்நாடகா முதல்வர்கள் எழுப்பியுள்ளனர். கேரள நிதி அமைச்சரும் இதே குரலை எதிரொலிக்கிறார். தென் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
இந்த நிலையில், தென் மாநில அரசியல்வாதிகளிலேயே சிறந்தவர்கள் யார்? என்ற கேள்வியை 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட்டில் முன் வைத்தோம். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பெயர்களையும் அதில் குறிப்பிட்டோம்.

தமிழகத்திற்கு 3வது இடம்
நமது வாசகர்கள் பதிவு செய்த வாக்குகள் அடிப்படையில், எந்த தென் மாநில அரசியல்வாதிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள். முதலில் தமிழகம். தமிழக அரசியல்வாதிகள்தான் சிறப்பாக செயல்படுவதாக 14.98 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இந்த பட்டியலில், 3வது இடத்தை பிடித்துள்ளது தமிழகம். அப்படியானால், முதல் 2 இடங்கள் யாருக்கு என கேட்கிறீர்களா. அதையும் அடுத்தடுத்து பாருங்கள்.

கர்நாடகா கம்மி
பட்டியலில் கர்நாடகாவுக்கு ஆதரவாக 2.96 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். காவிரி நதிநீர் உள்ளிட்ட தங்கள் மாநில உரிமை விவகாரங்களில் அம்மாநிலம் பிடிவாதமாக இருந்தாலும் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாலோ என்னவோ அம்மாநில அரசியல்வாதிகளுக்கு இவ்வளவுதான் ஓட்டு கிடைத்துள்ளது.

கேரளாவுக்கு முதலிடம்
இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது பினராயி விஜயன் ஆளும் கேரளா. கேரள அரசியல்வாதிகள் சிறப்பானவர்கள் என 36.12 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதற்கு அடுத்த இடம் சந்திரபாபு நாயுடுவின் ஆந்திராவுக்கு. ஆந்திர அரசியல்வாதிகள் சிறப்பானவர்கள் என 22.28 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். கேரளாவுடன் முல்லை பெரியாறு, ஆந்திராவுடன் செம்மர கடத்தல் துப்பாக்கி சூடு என விவகாரங்கள் இருந்தாலும், அம்மாநில அரசியல்வாதிகள் சிறப்பாக செயல்பட்டு தங்கள் மாநில உரிமைகளை பாதுகாப்பதாக நமது வாசகர்கள் கருதுவதே இதற்கு காரணம்.

தெலுங்கானா
இந்த பட்டியலில் சந்திரசேகர் ராவ் ஆளும் தெலுங்கானா 4.76 சதவீத வாக்குகளுடன் உள்ளது. யாருமே பெஸ்ட் இல்லை என 16.61 சதவீதம் பேர் கூறியுள்ள நிலையில், எல்லாருமே சூப்பர்தான் என 2.29 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதில் இருந்து நமது மக்களின் மனநிலை உங்களுக்கும் புரிந்திருக்கும் அல்லவா.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications