For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லா வேலையையும் விட்டுட்டு முதல்ல இங்க வந்து கையெழுத்து போடுங்க, ப்ளீஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: இணையதளத்தில் ஒரு உருப்படியான வேலை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இது மிகவும் முக்கியமான விஷயம். தமிழ்நாட்டவர் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து இதை ஆதரிக்க வேண்டும்.

வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழ்நாடுதான் இந்த குடிக்கு அடிமையாகி கேவலப்பட்டுப் போய் கிடக்கிறது. இது நாள் வரை குடி அடிமைகளாக அறியப்பட்ட கேரளா கூட திருந்தி விட்டது. கேரளாவுக்கு் போனால் உண்மையிலேயே சொர்க்கமாக காட்சி தருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் குடிகாரர்கள். வயது வரம்பே இல்லாமல் குடித்துத் திரிகிறார்கள்.

Online signature campaign for Total prohibition

மானம் மரியாதையை இழந்து நடு ரோட்டில் கிடக்கிறார்கள், குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் குப்பையோடு குப்பையாக விழுந்து கிடக்கிறார்கள். மாணவர்களும், மாணவிகளும் குடிக்கு அடிமையாகி வகுப்பறையும், இன்னும் பல இடங்களிலும் குடித்து விட்டு மானம் இழந்து நிற்கிறார்கள்.

இந்த நிலையில்தான் http://www.1millionsignatures.com/ என்ற இணையதளம் மூலம் இந்தியாவில் குடியை ஒழிக்கக் கோரி ஒரு அருமையான பிரச்சாரம் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் 10 லட்சம் பேரின் கையெழுத்தை ஆன்லைனில் பெறும் பிரச்சார இயக்கமாகும். குடி வெறியில் மதி கெட்டு போய் தடுமாறி

நிற்கும் மக்களை அறிவார்ந்த சமுதாயத்தில் இணைக்கும் முயற்சியாகும்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த கையெழுத்துப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு்ள்ளது.

அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். தமிழகத்தில் மது விலக்கை முழுமையாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் இதை உருவாக்கியுள்ளனர்.

நீங்களும் இதில் இணைந்து உங்களது ஆன்லைன் கையெழுத்தையும் இட்டு இந்தக் கோரிக்கை மனுவுக்கு வலு சேர்க்கலாம்.

English summary
An Online signature campaign has been launched to press Total prohibition in Tamil Nadu and the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X