உதகை அரசு மருத்துவமனையில் 'சிசேரியன்' செய்த 4 இளம்தாய்மார்கள் பலி!
உதகை: உதகை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற 4 இளம் தாய்மார்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அரசு மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி முதல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம் தாய்மார்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பெண்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால், அப்பெண்கள் பலியாகி இருக்கலாம் என உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே உயிரிழந்த பெண்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனபோதும், அடுத்தடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்கள் உயிரிழந்த சம்பவம் உதகையில் கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட பத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், உதகை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நான்கு பெண்கள் உயிரிழந்தது, அங்குள்ள கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications