மழைக் குளிரின் பிடியில் “ஊட்டி மலை பியூட்டி” – போர்வைக்குள் முடங்கிய சுற்றுலாப் பயணிகள்!
ஊட்டி: ஏப்ரல் தொடங்கி கோடை விடுமுறை ஆரம்பித்துள்ள நிலையில் சுற்றுலாவிற்கு பெயர் போன கோடை வாசஸ்தலமான ஊட்டியில் மக்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.
எனினும், தொடர் மழையின் காரணமாக முக்கால்வாசி சுற்றுலாப்பயணிகள் ஹோட்டல்களிலேயே முடங்கிக் கிடப்பதால் பொட்டானிக்கல் கார்டன், படகு சவாரி ஆகிய இடங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன.
தூறல் மழையிலும் சில,பல சுற்றுலாப்பயணிகள் மட்டுமே ஊட்டியின் அழகினை ரசித்து வருகின்றனர்.

மழையால் குறைந்த கூட்டம்:
நீலகிரி மாவட்டத்தில், குறிப்பாக, ஊட்டி, குன்னூரில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. தவிர, ஊட்டியை சுற்றிப் பார்க்க வந்த பயணிகளும், குளிருக்கு பயந்து, ஓட்டல், லாட்ஜ்களில் முடங்கி உள்ளனர்.

”வெறிச்” உதகை:
இதனால், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, ஷூட்டிங் மட்டம் உட்பட சுற்றுலா ஸ்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

படகு சவாரியும் குறைவுதான்:
ஊட்டி படகு இல்லத்தில் ஓரிரு படகுகளில் மட்டுமே சவாரியில் ஈடுபட்டுள்ளன. மழையையும் பொருட் படுத்தாமல், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். பெரும்பாலான படகுகள், ஓரங்கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு உடை கிடையாதாம்:
இந்நிலையில், படகு சவாரியில் ஈடுபடுகின்ற பயணிகளுக்கு பாதுகாப்பு உடையினை வழங்க மறுக்கின்றனராம் படகு உரிமையாளர்கள்.

கேள்விக்கும் “நோ” பதில்:
மழை நேரத்தில் யாருக்கேனும் படகு கவிந்து ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கும் பதிலளிக்க மறுக்கின்றார்கள்.

ரோஜாக் கூட்டத்தின் பெயர்:
ஊட்டி பொட்டானிக்கல் கார்டனில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்கண்காட்சியில், ஒரு ரோஜா பிரிவிற்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிங்க் நிற ரோஜா மலர்கள் அமைந்துள்ள பகுதியில் இப்பெயர்ப்பலகைப் பொருத்தப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications