அதிரடி இடமாற்றம்! அண்ணாமலையுடன் போட்டோ எடுத்த போலீஸ்காரருக்கு வந்த வினை! என்ன நடந்தது? பரபர தகவல்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையின்போது அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்த ஹில்காப் பிரிவை சேர்ந்த போலீஸ்காரர் கணேசன் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பாதயாத்திரை என்பது பாஜகவுக்கு கைக்கொடுக்கும் என அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் நம்புகின்றனர்.
அதன்படி ராமேஸ்வரத்தில் இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். தென்மாவட்டங்களில் பாதயாத்திரை முடிந்துள்ளது. இதையடுத்து கொங்கு மாவட்டங்களில் பாதயாத்திரை நடந்து வந்தது. தற்போது ஒரு வாரம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் அண்ணாமலையின் ‛என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை என்பது நடந்தது.
கடந்த 27 ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆளும் திமுக அரசை அவர் கடுமையான விமர்னசம் செய்தார். அதன்பிறகு அவர் ஊட்டிக்கு சென்று பாதயாத்திரையை மேற்கொண்டார். ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து ஏடிசி நோக்கி தொண்டர்களுடன் அண்ணாமலை நடந்து சென்றார்.
இந்த வேளையில் ஊட்டி காஃபி ஹவுஸ் சர்க்கிள் பகுதியில் பணியில் இருந்து 'ஹில் காப்' பிரிவை சேர்ந்த காவலர் கணேசன், தனது சீருடையுடன் அண்ணாமலையுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டார். இதுதொடர்பான போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பணியில் இருந்தபோது அண்ணாமலையுடன் சேர்ந்து கணேசன் போட்டோ எடுத்து கொண்ட சம்பவம் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் ஹில்காப் காவலரான கணேசன் தற்போது அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அதாவது தமிழக காவல்துறை சார்பில் மலை மாவட்டத்தில் போக்குவரத்தைச் சீரமைத்தல், சுற்றுலா பயணிகளுக்கு உதவும் பிரிவான ஹில்காப்-பில் இருந்து கணேசன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி கணேசன் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
*******
-
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications