பாலச்சந்திரன் மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது: ராஜபக்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மீனவர்களை விடுவிப்போமே தவிர மீனவர் படகுகளை விடுவிக்க முடியாது என்றும் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இந்து ஆங்கில நாளேட்டில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் மகள் சுகாசினி ஹைதர் பணியாற்றி வருகிறார். அவருக்கு மகிந்த ராஜபக்சே அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:

இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் 35 பரிந்துரைகளை இதுவரை நிறைவேற்றியுள்ளோம். சில பரிந்துரைகள்தான் நிறைவேற்றப்பட வேண்டும்.

புலிகளே பொறுப்பு

புலிகளே பொறுப்பு

போரின் போது காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்த ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறோம். இந்த ஆணையத்தின் முன்பாக 20 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களை வடக்குப் பகுதி தமிழர்கள் மட்டுமின்றி ராணுவத்தினரும் கூட கொடுத்திருக்கின்றனர். பெரும்பாலான காணாமல் போனதல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு.

நிலைமை மாறிவிட்டது

நிலைமை மாறிவிட்டது

வடக்கு கிழக்கின் இளைஞர்களிடத்தில் மனநிலை மாறி இருக்கிறது. விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த மூத்த அரசியல்வாதிகள்தான் மாறாமல் இருக்கின்றனர். வடபகுதியைச் சேர்ந்தவர்கள் தென் பகுதிக்கு, தென்னிலங்கையை சேர்ந்தோர் வடபகுதிக்கும் சுதந்திரமாக வந்து செல்லக் கூடிய நிலைமை இருக்கிறது.

பேசத் தயார்

பேசத் தயார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. இலங்கையின் வடக்கு மாகாண அதிகாரிகள் நியமனம் மற்றும் 13வது அரசியல் சாசன திருத்தம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச நான் தயாராக இருக்கிறேன். அவர்கள்தான் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள்.

90% ராணுவம் விலக்கப்பட்டுவிட்டது

90% ராணுவம் விலக்கப்பட்டுவிட்டது

இலங்கையின் வடபகுதியில் 2009ஆம் ஆண்டு யுத்தத்துக்குப் பின்னர் 90% ராணுவம் விலக்கப்பட்டுள்ளது. எங்கள் ராணுவத்தினரை இந்தியாவுக்கோ வேறு நாடுகளுக்கோ அனுப்ப முடியாது. எங்கள் நாட்டுக்குள்தான் நிறுத்த முடியும்.

எங்கும் குடியேறலாமே

எங்கும் குடியேறலாமே

வடபகுதியில் சிங்களக் குடியேற்றம் என்பதெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் இலங்கையின் குடிமகன் ஒருவர் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் குடியேறுகிற உரிமை உண்டு. அது தமிழரோ சிங்களவரோ முஸ்லிமோ யாராக இருந்தாலும் பொருந்தும்.

ஜெ.வுடன் பேச முயற்சி

ஜெ.வுடன் பேச முயற்சி

தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி பாதுகாப்பு அமைச்சகத்தில் வெளிவந்த கட்டுரை தவறானதுதான். அதற்காக நானே வருத்தம் தெரிவித்திருக்கிறேன். நான் ஜெயலலிதாவுடன் பேசுவதற்கு முயற்சிக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் எப்போதும் சமாதானத்துக்கான வெள்ளைக் கொடியை ஏந்துகிறவன்.

படகுகளை விடுவிக்க முடியாது

படகுகளை விடுவிக்க முடியாது

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால்தான் கைது செய்கிறோம். மிகப் பெரிய படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதால் எங்களது கடல் வளம் அழிக்கப்படுகிறது. இதை சகித்துக் கொண்டிருக்க முடியாது. தமிழக மீனவர்களை விடுவிக்க முடியுமே தவிர படகுகளை விடுவிக்கவே முடியாது. அப்படி படகுகளை விடுவித்தால் மீண்டும் மீண்டும் மீன்பிடிக்கவே வருவார்கள்.

மோடி பற்றி..

மோடி பற்றி..

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முயற்சிப்பேன். டெல்லியில் அவரை சந்தித்து சிறிது நேரமே பேச முடிந்தது. மிக வலிமையான தலைவர் மோடி. அவர் மிகப் பெரிய வெற்றியுடன் ஆட்சி அமைத்திருக்கிறார். அவருடன் நல்லுறவையே விரும்புகிறேன். டெல்லியில் சந்தித்த போது அவர் இலங்கைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன். ஐ.நா. கூட்டத்தில் சந்தித்தாலும் அழைப்பு விடுப்பேன்.

இந்தியாவுக்கு நாளை நெருக்கடி..

இந்தியாவுக்கு நாளை நெருக்கடி..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஏற்கவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் எப்போதும் உள்நாட்டு விசாரணையைத்தான் அனுமதிக்க முடியும். சர்வதேச விசாரணைகளை அனுமதிக்க முடியாது. அப்படியானால் நாளை காஷ்மீரில் மனித உரிமைகள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தால் என்ன நிலைப்பாட்டை மேற்கொள்வது?

பாலச்சந்திரன் மரணம்

பாலச்சந்திரன் மரணம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. யுத்தத்தில் இருதரப்பும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது யார் யாரை சுட்டார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?

இவ்வாறு ராஜபக்சே அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+