தொடரும் அதிருப்தி... செய்யூர் அதிமுக வேட்பாளருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள்!
காஞ்சிபுரம்: செய்யூர் சட்டசபைத் தொகுதியில், வெளித்தொகுதியில் இருந்து வேட்பாளரை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அது முதற்கொண்டு வேட்பாளரை மாற்றக் கோரி, ஆங்காங்கே அதிமுகவினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

வேட்பாளரை மாற்றக் கோரி சேலத்திலும், சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டிற்கு முன்னதாகவும் அதிமுக தொண்டர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவங்களும் அரங்கேறியது.
இதற்கிடையே சில தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை மாற்றி வருகிறார் ஜெயலலிதா.
இந்த சூழ்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தனித் தொகுதி அதிமுக வேட்பாளரான முட்டுக்காடு முன்னாள் ஊராட்சித் தலைவர் முனுசாமியை மாற்றக்கோரி, அவருக்கு எதிராக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தொகுதிக்கு சிறிதும் தொடர்பில்லாத ஒருவரை அதிமுக தலைமை செய்யூரில் நிற்க வைத்துவிட்டதாகக் கூறும் அக்கட்சித் தொண்டர்கள், முனுசாமியை மாற்றி விட்டு உள்ளூர் வேட்பாளருக்கு சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications