2வது முறையாக அரியணை ஏறும் ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம்!
சென்னை: தமிழகத்தின் முதல்வர் பதவியில் 2வது முறையாக அமர்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
இந்தப் பதவியில் ஏற்கனவே அவர் 2001ம் ஆண்டு முதல் முறையாக அமர்ந்துள்ளார். அப்போதும் கூட உச்சநீதிமன்றம் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததால், ஓ பன்னீர் செல்வம் முதல்வரானார்.
இப்போது அதே ஜெயலலிதாவுக்கு மீண்டும் சட்டச் சிக்கல் ஏற்பட்டு பதவி பறிபோன நிலையில் மீண்டும் முதல்வராகியுள்ளார் பன்னீர் செல்வம்.

ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம்
1951ம் ஆண்டு பிறந்த ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம் என்று அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் முழுமையான விசுவாசி ஆவார். தற்போது நிதியமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள பன்னீர் செல்வம். முன்பு வருவாய்த்துறை உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

விவசாயி - டீக்கடை அதிபர்
விவசாயம், டீக்கடை என்று வேறு சில முகங்களும் கொண்ட பன்னீர் செல்வம், பணிவுக்கும் பெயர் போனவர். ஜெயலலிதாவிடம் மட்டுமல்லாமல், தான் பணியாற்றும் துறைகளிலும் கூட அதிகாரிகளிடம் அதிர்ந்து பேசாத பண்பாளர் என்ற பெயரைப் பெற்றவர்.

பண்பாளர்..
அதிகாரிகளிடம் மரியாதையாகவும் நடந்து கொள்வதால் அதிகாரிகள் மட்டத்திலும் பன்னீர் செல்வத்துக்கு நல்ல பெயர் உள்ளது.

ஜெ. மீது கேஸ் வந்தபோது நகராட்சித் தலைவராக இருந்தவர்
1996ம் ஆண்டு, அதாவது ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு புகார் வந்தபோதும், வழக்கு வந்தபோதும் பெரியகுளம் நகராட்சியின் தலைவராக இருந்தார் பன்னீர் செல்வம். பின்னர் 2001 தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பொதுப்பணித்துறை அமைச்சரானார்.

முக்குலத்தின் முதல் முதல்வர்
2001ம் ஆண்டு இவர் முதல்வர் பதவியில் முதல் முறையாக அமர்ந்தார். முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவியில் அமர்ந்தது அதுவே முதல் முறை என்பதால் முக்குலத்தோரின் அன்பையும், ஆதரவையும் பெற்றார் ஜெயலலிதா.

2006ல் எதிர்க்கட்சித் தலைவர்
2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியை இழந்தபோது ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications