சட்டசபை இருக்கை ஒதுக்கீட்டுக்காக ஸ்டாலின் கொடுத்த பட்டியலில் கருணாநிதி பெயரே இல்லை: ஓபிஎஸ் 'பொளேர்'
சென்னை: சட்டசபையில் இருக்கை ஒதுக்கீட்டுக்காக மு.க.ஸ்டாலின் கொடுத்த பட்டியலில் திமுக தலைவர் கருணாநிதி பெயரே இல்லை என்று நிதி அமைச்சரும் சபை முன்னவருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வீல்சேருடன் சட்டசபை நிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்கும் வகையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டவில்லை என்று திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபை நிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்கும் வகையில் அவர் பயன்படுத்தும் வீல் சேர் சபைக்குள் வந்து செல்லக்கூடிய வசதி வேண்டும் என சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தோம்.

ஸ்டாலின் புகார்
ஆனால், கருணாநிதி வீல் சேரில் வந்து செல்ல முடியாத வகையில் 2-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து சட்டசபை முன்னவரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:

கருணாநிதிக்கு இருக்கை
கடந்த 25-ந் தேதியன்று சட்டப் பேரவைக்கு சக்கர நாற்காலியில் பேரவைக்கு வந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார், கருணாநிதி. அப்போது இருக்கை எண் 207-க்கு முன்புறம் அவருடைய சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே உறுதிமொழி ஏற்றார்.

விதிப்படிதான்....
அதைக் கருத்தில் கொண்டே அந்த இடம் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பேரவைக்குள் வந்து விவாதங்களில் பங்கேற்க வேண்டுமெனில், அவர் உறுதிமொழி எப்படி எடுத்துக் கொண்டாரோ அதேபோன்றுதான் கலந்து கொள்ள முடியும்.

ஸ்டாலின் பட்டியலில் கருணாநிதி இல்லை
திமுக உறுப்பினர்களுக்கு எந்தெந்த வரிசையில் இருக்கைகள் ஒதுக்க வேண்டுமென்ற பட்டியலை மு.க.ஸ்டாலின் அளித்திருந்தார். அதில், கருணாநிதியின் பெயர் இடம்பெறவே இல்லை. இதிலிருந்தே, சட்டப் பேரவைக்கு கருணாநிதி வருவதை ஸ்டாலின் விரும்பவே இல்லை என்பது தெளிவாகிறது
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications