ஜெ.,வீட்டில் நடந்த ரெய்டுக்கு சசி குடும்பம் பதறியது சந்தேகமா இருக்கே? - அஸ்பயர் சுவாமிநாதன்
ராத்திரியில் திடீர் ரெய்டு நடந்த போது விவேக், தினகரன் பதறியது ஏன் என்று கேட்டுள்ளார் ஓபிஎஸ் அணியின் அஸ்பயர் சுவாமிநாதன்
Recommended Video

சென்னை: ராத்திரியில் போயஸ்கார்டன் வீட்டில் ரெய்டு நடந்த போது சசிகலா குடும்பத்தினர் பதறியடித்து ஒடிவந்தது ஏன் என்று கேட்டுள்ளார் ஓபிஎஸ் அணியின் அஸ்பயர் சுவாமிநாதன்.
அதே நேரத்தில் இந்த ரெய்டு மனவேதனை தருவதாக பதிவிட்டுள்ளார் ஓபிஎஸ் அணியின் எம்.பி மைத்ரேயன்.

வருமானவரி சோதனைக்கு ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் இருவேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் நேற்று நடைபெற்ற வருமானவரி சோதனை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மாலை முதல் ரெய்டு நடந்தது என்று கூறினாலும் இரவுதான் ஊடகங்கள் மூலம் விவேக்கிற்கு தெரியவந்தது.
உடனே போயஸ்தோட்ட வீட்டிற்கு அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார் விவேக். ஆனால் அவரது காரை உள்ளே விட போலீசார் மறுத்து விட்டனர். இதனையடுத்து நடந்தே போனார் விவேக். தினகரனோ தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டார். ஆனால் ட்விட்டரில் உடனே கருத்தை பதிவிட்டார்.
இந்த பதற்றம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்று ஓபிஎஸ் அணியில் உள்ள அஸ்பயர் சுவாமிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். காலையில் 8.38 மணிக்கு பதிவிட்ட சுவாமிநாதன், ராத்திரியில் திடீர் ரெய்டு அலறியடித்து ஒடிவந்த விவேக், டென்சன் ஆன தினகரன் ஏன் இந்த பதற்றம் என்று கேட்டுள்ளார்.
போயஸ் கார்டனில் ரெய்டு என்ற உடன் சசிகலா குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பதற்றம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இந்த பதிவை போட்டு சில நிமிடங்களில் அவர் அதை நீக்கி விட்டார்.
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், வருமானவரி சோதனைக்கு வேதனையடைவதாக பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு கருத்துக்களை கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications