அரசின் சலுகைகளை பெற அதிமுக உறுப்பினராக இருக்க தேவையில்லை... தெளிவுப்படுத்திய ஓபிஎஸ்
அரசின் சலுகைகளை பெற அதிமுக உறுப்பினராக இருக்க அவசியமில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
Recommended Video

சென்னை: அரசின் சலுகைகளை பெற அதிமுக அடையாள அட்டை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதிமுக சார்பில் கடந்த 29-ஆம் தேதி முதல் அதிமுகவுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆங்காங்கே உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் , அதிமுக உறுப்பினர்தான் நமக்கு அத்தாட்சி. அந்த கார்டு என்பது உயிர் போன்றது. இந்த கார்டை அதிமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த கார்டு இருந்தால் மட்டுமே அரசாங்க உதவிகள் உள்பட எந்த ஒரு உதவியையும் நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ பெற முடியும் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன். அரசாங்கத்தின் மூலம் உதவி பெற வேண்டுமானால் இந்த கார்டு இருந்தால்தான் முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது அரசின் நலத்திட்டங்களை பெற அதிமுக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications