நாங்க பாஸ்... நீங்க ஃபெயில் எதிர்கட்சியினரை அட்டாக் செய்த ஓபிஎஸ்
சென்னை: காரசாரமாக நடக்கும் சட்டசபை விவாதத்தில் அவ்வப்போது சிரிப்பொலியும் கேட்பதுண்டு. சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி பேச்சும், அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் பதிலும் அமளி துமளிக்கு இடையே சற்றே ஆசுவாசத்தை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும்.
கே.ஆர். ராமசாமி: சட்டசபை தேர்தல் தொடர்பாக சில புள்ளி விவரங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தத் தேர்தலில் அதிமுக 1.76 கோடி வாக்குகளையும், திமுக - காங்கிரஸ் கூட்டணி 1.75 கோடி வாக்குகளையும் பெற்றன. சதவிகிதப்படி பார்த்தால், அதிமுக 40.8 சதவிகிதத்தையும், திமுக அணி 39.7 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன. இரண்டுக்குமான வித்தியாசம் 1.1 சதவிகிதம்தான் என்று பேசினார்.

ராமசாமியின் இந்தக் கருத்துக்கு, திமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம்: உடனே எழுந்து... சட்டசபை தேர்தலில் நாங்கள் அதிக சதவிகிதம் எடுத்து பாஸ் பண்ணியுள்ளோம். நீங்கள் ஃபெயில் ஆகியுள்ளீர்கள் என்றார். ( இதற்கு ஆளுங்கட்சியினர் மேஜையை தட்டினர்)
ஆளுங்கட்சியினர் மேஜையை தட்டினாலும் ஓபிஎஸ் சொன்ன பதிலால் அனைவருமே சிரித்தனர். இந்த பதிலால் சற்றே பேச்சை நிறுத்திய ராமசாமி பின்னர் சமாளித்த ராமசாமி பேச்சை தொடர்ந்தார்.
ராமசாமி: அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதனால்தான், நாங்கள் இங்கே (எதிர்க்கட்சி வரிசையில்) உட்கார்ந்திருக்கிறோம். நீங்கள் அங்கே (ஆளும்கட்சி வரிசையில்) அமர்ந்து இருக்கிறீர்கள் என்று முடிக்கவே ஆளுங்கட்சியினர் முகத்தில் புன்னகை பூத்தது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications