ஓபிஎஸ் கனவு பலிக்காது.. செங்ஸ் ஆருடம்!
அதிமுக ஆட்சி கவிழும் என்ற ஓபிஎஸின் கனவு பலிக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: அதிமுக ஆட்சி கவிழும் என்ற ஓபிஎஸின் கனவு பலிக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக ஆட்சிதான் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள செல்லம்பாளையத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பேராசை
அப்போது ஓ.பி.எஸ்,விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என்று கூறி உள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் ஒவ்வொருவருக்கும் ஒரு பேராசை உண்டு அதன் அடிப்படையில் சுய விளம்பரத்துக்காக கருத்துக்களை கூறுவது ஏற்புடையது அல்ல என்றார்.

கனவு பலிக்காது
அரசு கவிழும் என்று யார் கூறி வந்தாலும் அந்த கனவு பலிக்காது. அது நனவாகாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியாகக் கூறினார்.

100 ஆண்டுகள்
தமிழகத்தில் 50 ஆண்டுகள் அல்ல 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. ஆட்சிதான் நடைபெறும். இதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மீண்டும் சர்ச்சை
ஏற்கனவே இரு கோஷ்டிகளும் இணையும் என கூறப்பட்டு வந்த நிலையில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் முரணான கருத்தால் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் குறித்த செங்கோட்டையனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications