ஓ.பிஎஸ் வடக்கே போனா நாம தெற்கை திணறடிப்போம்.. மதுரையை அதகளப்படுத்தும் இபிஎஸ் அணி!
அதிமுகவின் இரு அணிகளும் தங்களது பலத்தை கூட்டுவதற்காக தொண்டர்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கியுள்ளன.
சென்னை : அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் சுற்றுப்பயணத்திற்கு போட்டியாக முதல்வர் பழனிசாமி தலைமையில் மதுரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் ஒரு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னையை அடுத்த கந்தன்சாவடியில் தொடங்கும் இந்த பயணத்தின் போது தொண்டர்கள் மத்தியில் தங்கள் அணியின் பலத்தை கூட்டவும், உள்ளாட்சித் தேர்தலுக்கு எப்படி தயாராவது என்றும் மாவட்ட பிரதிநிதிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலப்பரீட்சை
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பேசி ஒன்றுபட்டு செயல்படும் என்றும் தெரிவித்து பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்ட நிலையில், இரு கோஷ்டிகளும் தங்களது பலத்தை நிரூபிக்க புறப்பட்டு விட்டதால் இனிபேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மதுரையில் எடப்பாடி கூட்டம்
ஓ.பன்னீர்செல்வத்தின் காஞ்சி கூட்டத்தை தவிடுபொடியாக்கி மக்களின் கவனத்தை தனது பக்கம் ஈர்க்க மதுரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் பெருவிழா
ஜெ. பேரவை சார்பில் நடைபெறும் இளைஞர் பெருவிழா, 120 தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் தொடக்க விழா, இளைஞர்களுடன் முதல்வர் அமர்ந்து மதிய உணவு உண்ணும் நிகழ்ச்சி என்ற பக்கா பிளான் போட்டு மதுரையை அதகளப்படுத்தியுள்ளனர் இபிஎஸ் அணியினர்.

எங்கு பார்த்தாலும் போஸ்டர், பேனர், கட் அவுட்தான்
இதையொட்டி மதுரை முழுவதும் அதகளப்படுத்தி வருகிறது எடப்பாடி கோஷ்டி. எங்கு பார்த்தாலும் பேனர்கள், போஸ்டர்கள், கட் அவுட் மயமாக உள்ளதால் மதுரையே திணறிப் போயுள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றுள்ளார்.
-
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
லீமா ரோஸ் செய்த டீல்? குதிரை வேகத்தில் குதிரை பேரம்? 20 கோடிக்கு 10 அதிமுக எம்எல்ஏ வர்ற போறாங்களாமே -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
கூட்டுறவு சங்க பயிர்க்கடன் தள்ளுபடி.. விஜய் அரசு தந்த அல்வா! 2024 முதலே கணக்கெடுங்க: சீறிய எஸ்டிபிஐ -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications