நாங்க ஒன்னா சேர்ந்துட்டோம்.. தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்த ஓபிஎஸ் ஈபிஎஸ் அணி!
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணியினர் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இதையடுத்து சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது எனக்கூறியும் உண்மையான அதிமுக தாங்கள் தான் என்றும் இதனால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக் கோரியும் ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதற்கு எதிராக அப்போது சசிகலா அணியில் இருந்த அமைச்சர்களும் மனுத்தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.

இணைந்த அணிகள்
இரு அணிகளும் மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வந்தன. இந்நிலையில் அண்மையில் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல்
இதைத்தொடர்ந்து கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அவரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

தீர்மானத்தின் நகலும் தாக்கல்
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயக்குமார், தங்கமணி மற்றும் மைத்ரேயன் எம்பி, மனோஜ் பாண்டியன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் ஆவணங்களை தாக்கல் செய்த்தனர்.

இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளும் ஒன்றாக இணைந்துள்ளதை தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தும் வகையிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications