போடியில் மீண்டும் துண்டு போட்ட ஓ.பி.எஸ்: தொகுதி மாற்றப்பட்ட நத்தம், செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளானதாக சொல்லப்பட்ட அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு இந்த தேர்தலில் அவரது சிட்டிங் தொகுதியான போடியிலேயே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோருக்கு தொகுதி மாறியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளானதாக கூறப்பட்ட ஐவரணியில் இருந்த அமைச்சர்கள் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகியோருக்கு இம்முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காது என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

மொத்தம் 227 இடங்களுக்கு பட்டியலை இன்று வெளியிட்ட ஜெயலலிதா இதில் 10 அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. 17 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் ஜெயலலிதா.

பலியான பழனியப்பன்

பலியான பழனியப்பன்

நூற்றுக்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கும் சீட் கிடைக்காது என்று கூறப்பட்ட நிலையில், இன்று வெளியான வேட்பாளர் பட்டியலில் ஐவரணியில் இருந்த அமைச்சர்களில் பழனியப்பனுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

போடியில் மீண்டும் ஓ.பி.எஸ்

போடியில் மீண்டும் ஓ.பி.எஸ்

பொதுப்பணித்துறை அமைச்சரான ஓ. பன்னீர் செல்வம், போடிநாயக்கனூரில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 சட்டசபைத் தேர்தலிலும் பன்னீர் செல்வம் இதே தொகுதியில்தான் போட்டியிட்டார். 2001, 2006 சட்டசபைத் தேர்தலில் பெரியகுளத்தில் போட்டியிட்டார் ஓ.பி.எஸ். இம்முறை தொகுதி மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போடியில் துண்டு போட்டு விட்டார்.

நத்தம், வைத்திலிங்கம்

நத்தம், வைத்திலிங்கம்

பன்னீர் செல்வம் போன்றே ஜெயலலிதாவின் அதிருப்திக்குள்ளானவர்களின் பட்டியலில் இடம்பெற்ற அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கும் இத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.

தொகுதி மாற்றம்

தொகுதி மாற்றம்

நத்தம் விஸ்வநாதன் இம்முறை ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறை கரூரில் களம் கண்ட செந்தில் பாலாஜி இம்முறை அரவக்குறிச்சியில் போட்டியிடுகிறார்.

சாத்தூர் டூ திருமங்கலம்

சாத்தூர் டூ திருமங்கலம்

ஆர்.பி. உதயகுமார் கடந்த முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இம்முறை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதிக்கு புதியவர் என்பதால் தொகுதிவாசிகள் இவரை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+