ரூ.3 கோடியையும், 3 கிலோ தங்கத்தையும் உதறியவர் செம்மலை.. ஓபிஎஸ் நெகிழ்ச்சி!
கூவத்தூர் சொகுசு ஹோட்டலில் வைத்து தரப்பட்ட ரூ. 3 கோடி ரொக்கமும், 3 கிலோ தங்கத்தையும் உதறிவிட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர் செம்மலை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டி
சென்னை: சசிகலா அணிக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 3 கோடி ரொக்கமும், 3 கிலோ தங்கமும் வழங்கப்பட்டது. அதை வேண்டாம் என்று உதறிவிட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தவர் செமமலை என்று ஓ.பன்னீர் செல்வம் பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
சென்னையில் நடந்த ஈரோடு, நாமக்கல் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் இன்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்க யாரையும் அனுமதிக்காதபோது செங்கோட்டையனும், திண்டுக்கல் சீனிவாசனும் பார்த்ததாக கூறுவது ஆகாச பொய்யாகும்.

தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் அதிமுகவை காக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின்போது பாவலர் வரதராஜன் மேடையில் பாடும்போது ஒத்த ரூபா தர்றேன் என்று பாடுவார். அதுபோல கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏ-க்களுக்கு ரூ.3 கோடி ரொக்கமும், 3 கிலோ தங்கமும் வழங்கப்பட்டது.
அதை வேண்டாம் என்று கூறி விட்டு முகாமை விட்டு வெளியேறிய செம்மலை தனது தொகுதி மக்களிடம் 3 நாள்களாக கருத்தை கேட்டுவிட்டு, உங்கள் பணமும் வேண்டாம், தங்கமும் வேண்டாம் என்று உதறிவிட்டு எங்கள் அணிக்கு வந்துவிட்டார்.
முதல்வராக இருந்தால் ஆட்சியை எவ்வாறு தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். செம்மலை மட்டுமல்ல என்னுடன் உள்ள எம்எல்ஏ-க்கள் பணம், தங்கம் மீது மதிப்பளிக்காமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தனர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications