ஓபிஎஸ்க்கு உலகம் முழுவதும் சொத்துக்கள்..லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துங்க..போட்டு கொடுக்கும் ஜெயக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ பன்னீர் செல்வம் தனது மாநாட்டிற்கு யாரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் ஓ பன்னீர் செல்வத்திற்கு உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது. தமிழ்நட்டில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது.. தேனி மாவட்டத்தில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது.. என்பதையெல்லாம் திமுக தோண்டி எடுத்து சொல்லட்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக சட்டமன்றத்தில் பேச்சுரிமை இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று அதிமுகவில் வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. சட்டமன்றத்தில் 62 -க்கும் மேற்பட்ட பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் அதரவு இருக்கும் பட்சத்தில் யாருக்கு எதிரக்கட்சி துணைத்தலைவர் பதவி கொடுக்க வேண்டும்.

OPS has assets worldwide having, need anti-bribery department investigation - aiadmk jayakumar

எங்களுக்குதானே கொடுக்க வேண்டும். ஓபிஎஸ்க்கு எதிர்க்கட்சி துணைத்தலைவராக நீடிக்க என்ன தகுதி இருக்கு.. என்ன முகாந்திரம் இருக்கு... முகாந்திரம் கொஞ்சம் கூட இல்லை. முகாந்திரம் இல்லாத நிலையில் அவரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நீக்க வேண்டும் உதயகுமரை கொண்டு வர வேண்டும் என பல தடைவை வற்புறுத்தப்பட்டுள்ளது.

யாரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும்:எனவே இது பேச்சுரிமையே இது மறுக்கப்படும் சூழல்தான். நான் கூட சபாநாயகாரா இருந்தேன். எல்லாருக்குமே வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் இப்போது உறுப்பினர்களை விட சபாநாயகர்தான் அதிகம் பேசுகிறார். மக்களுடைய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினால் செவி சாய்க்க வேண்டும். அதற்கு பதிலாக திசை திருப்பக்கூடாது. அமைச்சர்களுக்கு அதிக நேரம் கொடுப்பது... அதற்கு மேல் சபநாயகர் பேசுவது..

இது எல்லாம் ஜனநாயகத்தை நசுக்கும் செயலாகத்தான் பார்க்க முடியும். ஆளுநரை பொறுத்தவரை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சொல்வது படிதான் இயங்க வேண்டும். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஓ பன்னீர் செல்வம் தனது மாநாட்டிற்கு யாரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

அதிமுகவில் இருந்து வழக்குகள் எல்லாம் முடிந்து இன்றைக்கு எடப்பாடி தலைமையில் சிறப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது. அவர்கள் மாநாடு நடத்திக் கொள்ளட்டும். யாரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும். அமெரிக்க அதிபரை கூப்பிடட்டும். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை கூப்பிடட்டும். உலகின் எந்த நாட்டு அதிபரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும்.. நரி வலம் போனால் என்ன.. இடம் போனால் என்ன.. எங்களை கடிக்காமல் இருந்தா சரி....

OPS has assets worldwide having, need anti-bribery department investigation - aiadmk jayakumar

உலகம் முழுவதும் சொத்துக்கள் இருக்கு:அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். கருப்பு பணம் வெளியே வரும். ஒரு 200 கோடி ரூபாய் செலவு செய்தால் நீங்கள் கூட 2 லட்சம் பேரை கூட்டி விடலாம். ஒரு ஆளுக்கு 300 ருபாய்...வண்டி..சாப்பாடு இதையெல்லாம் கொடுத்தால் ஒரு லட்சம் பேரை கூட்டிவிட்டோம் என்று சொல்லலாம். பணம் பாதாளம் வரை பாயும். ஓ பன்னீர் செல்வத்திற்கு இருக்கும் கருப்பு பணம் எல்லாம் இப்போது வெளிவருகிறது.

அதுவரையில் சந்தோஷம் தான். இதுக்காக ஒரு 200 கோடி ரூபாய் அவர் வீட்டில் இருந்து கொண்டு வந்து ஒரு மாயையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிற விஷயம் தான் இது. எனவே ஒரு தாக்கமும் ஏற்படாது. அவருடைய கருப்பு பணம்தான் மக்களிடம் சேரப்போகிறது. ஓ பன்னீர் செல்வத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை பண்ணட்டும். நானே சொல்கிறேன். உடனே பண்ண வேண்டும் தான் என்று சொல்கிறேன்.

ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியதை கிடப்பில் போட்டுள்ளது. அதை தூசு தட்டட்டும். அவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது. தமிழ்நட்டில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது.. தேனி மாவட்டத்தில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது.. என்பதையெல்லாம் திமுக தோண்டி எடுத்து சொல்லட்டும். ஆனால் சொல்ல மாட்டாங்க... இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+