5 ஆண்டுகளில் ஓ.பி.எஸ் சுமந்து வந்த 'அம்மா ஸ்டிக்கர்' பட்ஜெட் பெட்டிகள் இதோ
சென்னை: தமிழக சட்டசபை எத்தனையோ நிதியமைச்சர்களை கண்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய அவர்கள் வந்த போது, ஒரு பெட்டியை எடுத்து வருவார்கள்.
சட்டசபையில் சில மணிநேரங்கள் அந்த ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளைப் பற்றியும் வரிகளையும், அறிவிப்புகளையும் சட்டசபையில் வாசிப்பார்கள்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1991 - 96ல் அப்போதைய நிதியமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், 2001 - 2006ம் ஆண்டு காலங்களில் நிதியமைச்சராக இருந்த பொன்னையன் ஆகியோர் நிதிநிலை அறிக்கை வாசித்துள்ளனர். அப்போது எல்லாம் பெட்டிகளில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டவில்லை.
இந்த 5 ஆண்டு காலத்தில்தான் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி பிரபலப்படுத்தியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்

2011 முதல் நிதியமைச்சர்
நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 2011ம் ஆண்டு நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். இடையே முதல்வராகவும் பதவி வகித்தார்.

அம்மா ஸ்டிக்கர்கள்
பட்ஜெட் சூட்கேசில் ஓ.பி.எஸ் ஒட்டிய அம்மா ஸ்டிக்கர் ஆண்டுக்கு ஆண்டு மாறுகிறது. பச்சை கலர் பின்னணி, புளு கலர் பின்னணி என வண்ணங்கள் மாறியுள்ளன.

நாடாளுமன்ற பின்னணி
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற கட்டிடத்தின் பின்னணியில் ஜெயலலிதா இருந்த ஸ்டிக்கர் ஒட்டிய சூட்கேஸ் ஓ.பன்னீர் செல்வம் கையில் இருந்தது.

தனியே தன்னந்தனியே
கடந்த 2015-2016ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது ஜெயலலிதா சிறை தண்டனை பெற்று முதல்வர் பதவி இழந்திருந்தார். நிதியமைச்சரும், முதல்வருமாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் எந்த ஒரு விளம்பரமும் இன்றி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட்
வழக்கில் இருந்து விடுதலை பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதை அடுத்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை பின்னணியில் ஜெயலலிதா சிரித்துக் கொண்டிருக்கும் சூட்கேசினை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் போது எடுத்து வந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

பணிவு பன்னீர் செல்வம்
பட்ஜெட்டை விட பட்ஜெட் சூட்கேசை சுமந்து வந்த ஓ.பன்னீர் செல்வத்தில் பணிவுதான் இங்கே பிரபலமாக பேசப்படுகிறது. 2011-2012-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது. அந்த ஆண்டு, நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தன்னுடைய காலில் செருப்புடன் இருந்திருக்கிறார். இதன்பிறகு 4 ஆண்டுகளில் காலில் செருப்பு போடாமலேயே பட்ஜெட் சூட்கேசை சுமந்து வந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் பன்னீர் செல்வம் என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications