புகழேந்திய வச்சிகிட்டு! எனக்கு பக்கத்திலேயே இருந்துட்டு என் பதவிக்கு குறி வைக்கிறாரு! ஓபிஎஸ் கிண்டல்
கள்ளக்குறிச்சி: எனக்கு பக்கத்திலேயே நின்றுக் கொண்டு என்னோட பதவிக்கு குறி வைக்கிறார் என ஓபிஎஸ் ஒரு தொண்டரை பார்த்து ஜாலியாக தெரிவித்தார்.
விழுப்புரத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு பயண ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தொண்டர்களின் உரிமையை மீட்டுத் தரும் வகையில்தான் தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளேன். இதற்காக மாநிலம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 24 மாவட்டங்களில் பயணத்தை முடித்துள்ளேன்.
புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள். தமிழக அரசியலில் சவால்களை சமாளித்து விஜய் வலம் வருவார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான ஆட்சியை தருகிறார்.
அவருடைய ஆட்சி நிர்வாகத்தையும் பற்றியும் அயல்நாட்டுடன் அவருடைய அணுகுமுறையையும் 20 வளர்ந்த நாடுகள் எல்லாம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள். எனவே 3ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் வலம் வர வேண்டும் என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது.
நாங்களும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து பயணிப்போமா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என ஓபிஎஸ் சொல்லிக் கொண்டிருக்க, பின்னால் இருந்த ஒருவர் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக என சொல்ல அதற்கு ஓபிஎஸ் சிரித்த படியே இப்போ பார்த்தீர்களா, என் பக்கத்தில் இருந்துகொண்டே என் பதவிக்கு குறி வைக்கிறார்.
இதுதான் அரசியல் என சிரித்தார். அப்போது நிருபர்கள் வேறு எந்த அரசியல் கட்சியினருடனாவது கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறதா என கேட்டதற்கு ஓபிஎஸ் சக அரசியல் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் வந்ததும் உங்களிடம் சொல்கிறோம்.
தனிக் கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தொண்டர்களின் உரிமை பறிக்கப்பட்டதால் அவற்றை மீட்டு அதிமுக தொண்டர்களிடம் கொடுக்கும் வரை இந்த போராட்டம் ஓயாது என சொல்ல அதற்கு அருகே இருந்த புகழேந்தி, அஇஅதிமுக என்றால் ஓபிஎஸ், ஓபிஎஸ் என்றால் அஇஅதிமுக என சொல்ல அதற்கு ஓபிஎஸ்ஸோ, அய்யய்யோ என்ன சாமி இப்படி சொல்லிட்டா எப்படி என ஓபிஎஸ் கேட்டார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ்












Click it and Unblock the Notifications