13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு செப்டம்பரில் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: மீண்டும் முதல்வராகியுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு இது ஒரு வனவாசம் முடிந்தது போல. அதாவது கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் பதவியில் அமர்ந்த ஓ.பன்னீர் செல்வம், 13 ஆண்டுகள் முடிந்த நிலையில் அதே போல் இன்னொரு செப்டம்பர் மாதம் முதல்வராகியுள்ளார்.
2001ம் ஆண்டும் ஜெயலலிதா கோர்ட் தீர்ப்பால் முதல்வர் பதவியை இழந்தார். இப்போதும் ஜெயலலிதா கோர்ட் தீர்ப்பால் முதல்வர் பதவியை இழந்து கைதும் ஆகி சிறைக்குள்ளும் போய் விட்டார். இதனால் 2வது முறையாக ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் மீண்டும் ஒரு வசந்தம் வந்துள்ளது.

செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்....
2001ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது அவர் முதல்வராவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

உங்கள் வீட்டுப் பிள்ளை
2001ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி முதல் 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி வரை முதல்வர் பதவியில், தமிழகத்தின் புதிய உங்கள் வீட்டுப் பிள்ளையாக வலம் வந்தவர் ஓ.பன்னீர் செல்வம்.

அனுபவம் புதுமை
முதல் முறையாக முதல்வர் பதவிக்கு ஓ.பி.எஸ் வந்தபோது, அமைச்சராக மட்டுமே இருந்தார். முதல்வர் பதவி என்ற மிகப் பெரிய சுமையைத் தூக்கி ஜெயலலிதா அவர் மீது வைத்தபோது நிச்சயம் கலங்கித்தான் போய் விட்டார் பன்னீர் செல்வம். காரணம், அவருக்கு அப்போது அனுபவம் குறைவு என்பதால்.

அந்த நாள் ஞாபகம்
இன்று மீண்டும் ஒரு செப்டம்பர் மாதத்தில் முதல்வராகியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இந்த சமயத்தில் அந்த நாள் ஞாபகம் நமது நெஞ்சத்தில் அலை மோதுகிறது.

நீ எங்கே..
2001ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி இவர்தான் உங்களது அடுத்த முதல்வர் என்று ஓ.பன்னீர் செல்வத்தை கை காட்டி கூறிய ஜெயலலிதா இன்று சென்னையிலேயே இல்லை. சிறையில் அடைபட்டுள்ளார்.

என்னைத் தெரியுமா....
ஆனால், முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோது எப்படி இருந்தாரோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதிகம் பேசுவதில்லை. எப்போதும் ஒரு புன்னகை, பவ்யம், அமைதி, சாந்தம்.

முன்பை விட இப்போது நல்ல அனுபவம்...
ஆனால் முன்பை விட இப்போது நல்ல அனுபவத்துடன் உள்ளவராக மாறியுள்ளதால், அரசு நிர்வாகத்தின் அனைத்து வேலைகளிலும் திறம்பட திறமையாளராக மாறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம் என்கிறார்கள். ஜெயலலிதா கொடுக்கும் அனைத்து அசைன்மென்ட்களையும் சிறப்பாகவும், சீரிய வகையிலும் செய்து முடித்து நல்ல பெயரும் பெற்றவர் ஓ.பன்னீர் செல்வம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications