For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓ.பன்னீர் செல்வத்தின் 5வது பட்ஜெட்... முதல்வராக முதல் பட்ஜெட் தாக்கல்!

Google Oneindia Tamil News

சென்னை: 2வது முறையாக முதல்வராகியுள்ள ஓ.பன்னீர் செல்வம். இன்று தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதேசமயம், நடப்பு தமிழக அமைச்சரவையில் நிதியமைச்சராக அவர் தாக்கல் செய்வது இது 5வது பட்ஜெட்டாகும்.

OPS's 5th budget

2015 -16 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இது நடப்பு அதிமுக அரசில் நிதியமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள 5வது பட்ஜெட்டாகும். அதேசமயம், 2வது முறையாக முதல்வராகியுள்ள அவர் தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட்டாகும்.

  • ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு, கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது.
  • 2011 - 12ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
  • 2012- 13, 2013- 14 ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன.
  • 2014- 15ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
  • 4 பட்ஜெட்டுகளையும் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
  • இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அவர் நிதியமைச்சர் மற்றும் முதல்வர் பொறுப்பில் இருந்து தாக்கல் செய்தார்.
  • முதல்வர் ஒருவர் தமிழகத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது 2000மாவது ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
  • 2000- 2001ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார். 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார்.
  • அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாகும் இது. 2016ம் ஆண்டு மே மாதம் அதிமுக அரசின் ஆட்சி காலம் முடிகிறது. எனவே அடுத்த ஆண்டு பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாகவே இருக்கும்.
English summary
This is CM O Pannerselvam's 5th budget as finance minister in this ADMK govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X