ஸ்டாலினை முதல்வராக்கும் வரை தூங்கமாட்டேனு சபதமிட்ட வைகோவுக்கு இனி தூக்கம் போச்சு - ஓபிஎஸ் தாக்கு!
சென்னை: ஸ்டாலினை முதல்வராக்கும் வரை தூங்கமாட்டேன் என்று கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இனி தூக்கம் வராது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா 31 மாவட்டங்களில் நடைபெற்றது. இதையடுத்து இதன் நிறைவு விழா 32-ஆவது மாவட்டமான சென்னையில் நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இந்த விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின், எம்எல்ஏ தினகரன், கனிமொழி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே இந்த விழா என கூறி ஸ்டாலின் இதில் பங்கேற்கவில்லை. அது போல் டிடிவி தினகரனும் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

ஆளும் கட்சி
இந்நிலையில் நேற்று இந்த விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில் அதிமுகதான் எப்போதும் ஆளும் கட்சியாக இருக்கும்.

10 லட்சம் பேர்
இதுதான் வரலாறு. தமிழர்களின் நலன் காக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே, எம்ஜிஆரின் புகழும் சக்தியும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் மறைந்து போய்விடாது. இந்த விழாவில் 10 லட்சம் பேர் பங்கேற்றதால் சென்னையே குலுங்கியது.

ஸ்டாலின் பெயர்
எம்ஜிஆர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே இன்றைய வரலாறு. கருணாநிதியை விமர்சித்து பேசுவதாக கூறி மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்கவில்லை. அழைப்பிதழில் ஸ்டாலின் பெயர் முறையாக இடம்பெற்றும் அவர் பங்கேற்கவில்லை.

குன்றத்தூர் மலை
திமுக ஆட்சியில் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் இருந்தவர்களை விமர்சனம் செய்யாமல் எப்படி இருக்க முடியும். ஸ்டாலினை முதல்வராக்கும் வரை தூங்கமாட்டேன் என்ற வைகோவுக்கு இனி தூக்கமே வராது. குண்டூசியை வைத்துக் கொண்டு குன்றத்தூர் மலையை ஓட்டை போடுவேன் என டிடிவி துடிக்கிறார் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications