அதிமுகவின் பொதுச் செயலாளராக ஓபிஎஸ்தான் வர வேண்டும்.. சசிகலா இருக்கக் கூடாது.. பொன்னையன் ஆவேசம்
அதிமுகவின் பொதுச் செயலாளராக ஓபிஎஸ்தான் வர வேண்டும் என்று பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஓபிஎஸ்ஸை நியமிக்க வேண்டும் என்று பொன்னையன் கூறியுள்ளார்.
நேற்று சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மைத்ரேயன் டெல்லி சென்று சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தலைமைச் செயலாளர் நஜீம் ஜைதியை சந்தித்தார்.

கிட்டத்தட்ட அதே நேரத்தில், சென்னையில் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தற்காலிக பொதுச்செயலாளர் என்று சசிகலாவை நியமிக்க முடியாது. கட்சியில் 5 ஆண்டு காலம் தொடர்ந்து இல்லாத சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது.
அதே போன்று அவரால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனின் நியமனமும் செல்லாது. அதிமுகவின் பொதுச்செயலாளராக பன்னீர்செல்வம் தான் வரவேண்டும். அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளருக்கான வாக்குப்பதிவு தொண்டர்கள் மத்தியில் நடைபெற வேண்டும் என்று பொன்னையன் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாஃபா பாண்டியராஜனும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தவறு என்று கூறினார். மேலும் சசிகலா எடுத்த அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications