கருத்து கந்தசாமி, சிஸ்டம் சிந்தனையாளர்கள்... ரஜினி. கமல் மீது ஓபிஎஸ் தாக்கு
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினியையும் கமல்ஹாசனையும் ஓராண்டு சாதனை விழாவில் சாடியுள்ளார்.
சென்னை: மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள் என ஓராண்டு சாதனை விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஓராண்டு சாதனை விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், ஆங்கில மொழிகளில் அரசின் ஓராண்டு சாதனை மலரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கப்போகிறது என்றார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறினார். புதிதுபுதாக பலர் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற அவர் மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள் என்று கூறி ரஜினியை சாடினார்.
இதேபோல் சிலர் கருத்து கந்தசாமியாக உள்ளனர் எனக்கூறி கமல்ஹாசனையும் வாரினார். மேலும் எங்களுக்கு குழிபறிக்க நினைப்பவர்களை நாங்கள் விடமாட்டோம் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications