ஓபிஎஸ் போல எனக்கு நடிக்கத் தெரியாது.. சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சால் சலசலப்பு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்கார் வாங்கும் அளவுக்கு நடிக்க முடியாது என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போல தனக்கு நடிக்கத் தெரியாது என்றும் அவரைப் போல ஆஸ்கர் விருது வாங்கும் அளவுக்கு நடிக்க முடியாது என்றும் சட்டசபையில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார். இதற்கு ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் தமிழக சட்டசபையின் பொது விவாத கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசுகையில், அண்ணா, கருணாநிதி, க. அன்பழகன் போன்றோர் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வந்த காட்சியைப் பார்த்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் வந்தபோதும் பார்த்திருக்கிறோம். எல்லோரும் சாதாரணமாக நிதிநிலை அறிக்கையை எடுத்து வந்துதான் தாக்கல் செய்துள்ளதாக கூறி தற்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததை குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், ''முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பற்றி திமுக உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். அவரைப் போல ஆஸ்கர் விருது வாங்கும் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது'' என்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எஸ்.செம்மலை, கே.பாண்டியராஜன், ஓ.கே.சின்னராஜ் உள்ளிட்டோர் எழுந்து நின்று கோஷமிட்டனர். அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களை பேச பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை.
அப்போது திமுக உறுப்பினர் சிலர் எழுந்து அமைச்சர் பேசியது தவறு எனக் குறிப்பிட்டனர். அப்போது குறுக்கிட்ட பேரவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன், ''ஓபிஎஸ்ஸுக்கு திமுக உறுப்பினர்கள் வக்காலத்து வாங்குவது ஏன்?'' என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications