எங்கண்ணன் சின்ன புரட்சித் தலைவர்டா.. சின்னம்மாவுக்கு எதிராக கிளம்பிய ஓபிஎஸ் கோஷ்டி!
அம்மா இறந்த உடன் அதிமுகவினர் சின்னம்மா புகழ் பாடத் தொடங்க, ஒபிஎஸ் கோஷ்டியினரோ சின்ன புரட்சித்தலைவர் பட்டம் அளித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
சென்னை: சினிமாவில்தான் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் பட்டம் கொடுப்பார்கள். இளையதளபதி புரட்சி தளபதி, சின்ன தளபதி பட்டமும் கொடுத்து போஸ்டர் ஓட்டினார்கள். புரட்சி தலைவர் என்பது எம்ஜிஆரை மட்டுமே குறிக்கும் என்பதால் விஜயகாந்த் புரட்சி கலைஞரானார்.
இந்த பட்டங்கள் இப்போது அரசியலிலும் நுழைந்து விட்டது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்த உடன் கறுப்பு எம்.ஜி.ஆர் ஆனார். அம்மா என்றாலே ஜெயலலிதாதான் என்பது நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தெரியும். நேற்று வரை அம்மா புராணம் பாடி வந்த அதிமுகவினர் இப்போது சின்ன அம்மா சசிகலாவின் புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.

சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று கூறி வந்தவர்கள் இப்போது ஆட்சியையும் கட்சியையும் தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டுக்கொண்டு போயஸ் கார்டன் வந்து வரிசையில் நிற்கின்றனர்.
கட்சியின் பொதுச்செயலாளர் என்பது வரை சின்னம்மா ஓகே தான். ஆனால் முதல்வராக ஓபிஎஸ் ஒத்துக்கொள்வாரா? அவரது ஆதரவாளர்கள் விடுவார்களா என்பதுதான் கேள்வி.

சின்ன அம்மாவிற்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ்க்கு சின்ன புரட்சித் தலைவர் பட்டம் சூட்டி போஸ்டர் ஒட்டி வருகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். சின்ன சின்னம்மா, பெரிய பெரியம்மா... சித்தப்பா, என இன்னும் எத்தனை போஸ்டர்கள் முளைக்கப் போகிறதோ?
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications