ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் பேரணி.. களை கட்டிய போடி!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.
தேனி: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அவரது சொந்த தொகுதியான போடி நாயக்கனூரில் அதிமுகவினர் பேரணி நடத்தினர். இதில் 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக திடீரென வெகுண்டெழுந்த முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும், அவர் மீது திரும்பியுள்ளது. அனைத்து சமூக வலை தளங்களிலும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது.

அதேநேரத்தில் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் பலரும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணி திரண்டு வருகின்றனர். இதனால் மன்னார்குடி கோஷ்டி குழப்பத்தில் உள்ளது. கட்சியை கைப்பற்றி சசிகலா தரப்பு முதல்வராக வேண்டும் என துடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக, தொண்டர்கள், பொது மக்கள் மத்தியில் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதியான தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக தொண்டர்கள் பிரமாண்டான பேரணியை நடத்தியுள்ளனர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் சசிகலாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஓபிஎஸ்சுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications