ஜெ. மரணம்.. விசாரணை கமிஷனை அமைக்க முயற்சித்தேன்.. பிரச்சனை வந்துவிட்டது… ஓபிஎஸ் குற்றச்சாட்டு
பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் குணங்களை ஒருங்கே கொண்டவர் ஜெயலலிதா என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷனை அமைக்க முயற்சி செய்த போதுதான் தனக்கு பிரச்சனை வந
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனை அமைக்க முயற்சித்த போதுதான் தனக்கு பிரச்சனை வந்தது என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் சசிகலா அணியினர் தனியாகவும் ஓபிஎஸ் அணியினர் தனியாகவும் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதா எம்எல்ஏவாக இருந்து மறைந்த ஆர்.கே. நகரில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நலத்திட்டங்களை வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

அப்போது, விழாவில் பேசிய ஓபிஎஸ், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகிய மூன்று திராவிட இயக்கத் தலைவர்களை பின்னொற்றி வந்தவர் ஜெயலலிதா என்றும், அவர்கள் மூவரின் அறிவு, ஆற்றல், குண நலம் ஆகியவற்றை ஒருங்கே பெற்று வளர்ந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும், ஜெயலலிதாவால் ஒன்னரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்றி காட்டிய அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று கூறிய ஓபிஎஸ், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனை அமைக்க முயற்சித்த போதுதான் தனக்கு பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்துள்ள பல்வேறு சந்தேகங்களை உரிய நீதி விசாரணை மூலம் வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறிய ஓபிஎஸ், அதிமுகவையும் அதன் ஆட்சியையும் மீட்டெடுக்கும் தர்ம யுத்தம் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications