தொப்பி போட்டுகிட்டு பணம் கொடுக்கிறது திமுகவும் ஒபிஎஸ் அணியும்...பழி எங்கள் மீதா?- 'அடடே' தினகரன்
ஆர்கே நகரில் திமுகவும் ஓபிஎஸ் அணியினரும் எங்கள் சின்னமான தொப்பியை அணிந்துகொண்டு, அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். ஆனால் நாங்கள் கொடுப்பதாக பழி எங்கள் மீது சுமத்தப்படுகிறது என கூறியுள்ளார்
சென்னை: திமுகவும் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு தொப்பி அணிந்துகொண்டு பணம் கொடுத்து விட்டு, பழியை எங்கள் மீது சுமத்தி விடுகின்றனர் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்கே நகரில் அதிமுக அம்மா அணி சார்பாக போட்டியிடும் டிடிவி தினகரன் அணியினர், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து பலமுறை காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். காமாட்சி விளக்குக் கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டு, 3 பேர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். கருணாமூர்த்தி என்பவர் பணம் கொடுக்கும்போது பிடிபட்டார். மேலும் நேற்று சந்தானம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் டிடிவி தினகரனோ, வாக்காளர்களுக்கு நாங்கள் பணமோ, பொருளோ கொடுக்கவில்லை. திமுகவினரும், ஓபிஎஸ் அணியினரும் தொப்பி அணிந்து, வாக்காளர்களிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்களக் கொடுக்கின்றனர். ஆனால், பழி எங்கள் மீது விழுகிறது.
அவர்கள் எண்ணம் ஆர்கே நகர் இடைதேர்தலை நிறுத்த வேண்டும் என்பதே. அப்படி ஒருவேளை நடந்தாலும், மீண்டும் நடக்கும் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் நேற்று இரவு ஆர்கே நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூறியுள்ளார்.
ஆட்டோவில் நின்றபடியே தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தபோது, அமைச்சர் தங்கமணி மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
டிடிவி தினகரனின் அணியினர், பணப் பட்டுவாடா செய்யும்போது காவல்துறையில் சிக்கிக் கொண்டால், தினகரன் இவ்வாறு புலம்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications