ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் விறு விறு… 108 வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஓபிஎஸ் கோஷ்டி!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான 108 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் ஓபிஎஸ் வெளியிட்டார். அதனை வேட்பாளர் மதுசூதனன் பெற்றுக் கொண்டார்.
சென்னை: அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேர்தல் அறிக்கையை தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் பணிமனையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதனை ஆர்.கே. நகர் வேட்பாளர் மதுசூதனன் பெற்றுக் கொண்டார்.

10 பக்கத்தில் உள்ள இந்த அறிக்கையில் ஜெயலலிதா ஆர்.கே. நகருக்கு செய்துள்ள சாதனைகள் என்று இரண்டு பக்க அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கல்விக்கு முக்கியத்துவம், இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி, சுகாதாரம் மருத்துவ வசதி, கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்றுதல், முதியோர் நலம், வீட்டுமனைப்பட்டா வழங்குதல், கழிவுநீர் வசதி ஏற்படுத்துதல், நியாயவிலைக் கடைகள், நூலகங்கள் அமைத்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான தேவையை பூர்த்தி செய்தல், திருநங்கைகளுக்கான தொழில் பயிற்சி உள்ளிட்ட 108 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, ஜெயலலிதா இறப்பதற்கு முன்னர், இந்தத் தொகுதியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்ட பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் இந்த தேர்தல் அறிக்கையில் உறுதி கூறப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications