தினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுங்கள்.. வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணி மனு!
தினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்துள்ளனர்.
டெல்லி: தினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்துள்ளனர்.
தினகரனுக்கு ஆதரவாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள மூன்று எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்துள்ளனர். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்பி மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி ஆகியோர் இன்று வெங்கையா நாயுடுவை சந்தித்து மனு அளித்தனர்.
தினகரன் ஆதரவு எம்பியான நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோகுலகிருஷ்ணனை தகுதி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 3 பேரும் அதிமுகவில் இருந்து தினகரன் அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications