மதுரை விமான நிலையத்தில் தினகரன்- ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்
டி.டி.வி தினகரன் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
மதுரை : மதுரை விமான நிலையத்தில் டி.டி.வி தினகரன் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு நடந்தது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
ஆர்.கே நகர் எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரன் இன்று மதியம் 1.30 மணி விமானத்தில் மதுரையில் இருந்து சென்னை செல்ல இருந்தார். அவருக்கு முன்னதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 12.50 மணி விமானத்தில் சென்னை செல்ல இருந்தார்.

இவர்கள் இருவரையும் வழியனுப்ப இருதரப்பு ஆதரவாளர்களும் மதுரை விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். ஆனால், நேரம் கடந்தும் ஓ.பி.எஸ் விமான நிலையம் வராததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இருவரும் 1.30 மணி விமானத்தில் செல்லலாம் என்கிற தகவல் வெளியே நின்றிருந்த ஆதரவாளர்களிடையே பரவியது. இதனையடுத்து இரு தரப்பினரும் கோஷமிடத் துவங்கினர்.
டி.டி.வி தரப்பினர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷமிட்ட்டதும், அங்கு குவிந்திருந்த ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications