தமிழகத்தில் பிரச்சினை வெடிக்கலாம்... மத்திய உளவுத்துறை எச்சரிக்கை.. உஷார் நிலையில் போலீஸ்!
தமிழகத்தில் சசிகலா ஆதரவாளர்களால் பிரச்சினை வெடிக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் சசிகலா தரப்பினரால் பிரச்சினை அதிகமாகலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தமிழக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளதாம்.
சசிகலா தரப்பு நாளுக்கு நாள் படு வேகமாக பலவீனமடைந்து வருகிறது. அவர்களின் ஒவ்வொரு கதவும் மூடப்பட்டு வருகிறது. இதனால் சசிகலா தரப்பு விரக்தி அடைந்து வருகிறது. சசிகலாவே கூட நிதானம் தவறிப் பேச ஆரம்பித்துள்ளார். மிரட்டுவது போல பேச ஆரம்பித்துள்ளார்.

மேலும் தஞ்சை, மன்னார்குடியிலிருந்து பெருமளவில் இளைஞர்கள் கொண்டு வரப்பட்டு சென்னை முழுவதும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இவர்கள் சென்னையில் கலாட்டாவில் ஈடுபடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதையடுத்து நேற்று சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள விடுதிகள், கல்யாண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
இரவும் கூட விடிய விடிய சென்னை நகரிலும், நகரின் எல்லைப் பகுதிகளிலும் வாகனச் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாம். இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சசிகலா ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாம்.
இதனால் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் எங்கெல்லாம் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாமும் கூட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications