செட்டிநாடு அதிரசம் இப்ப உங்களுக்காக ஆன்லைனில்.. நாங்க புதுசு கண்ணா புதுசு!!

Subscribe to Oneindia Tamil

இனிப்புகள் இல்லாமல் தமிழர்கள், பண்டிகைகளை கொண்டாடுவதே இல்லை. அதுவும் அந்த இனிப்பு வகைகளில், அதிரசம் என்னும் ஒரு சுவையான, தட்டையான, உடலுக்கு சக்தி தர கூடிய ஒரு இனிப்பு இருந்தால்தான், அந்த இனிப்பு வகைகளுக்கு ஒரு வித கெளரவம்.

செட்டிநாடு அதிரசம் வாங்க..

தீபாவளி என்ற ஒரு இனிமையான பண்டிகை வந்தாலே, நமக்கு உடனே நம் நினைவுக்கு வருவது சுவையான இனிப்பு பண்டங்கள் தான். அதிலும் அந்த அதிரசம் என்ற ஒரு இனிப்பு பண்டத்தை பார்த்தாலே பரவசம் தான். அதிரசம் தட்டையாகவும், சுவையாகவும் இருக்கும் ஒரு இனிப்பு பண்டம் . இந்த அதிரசம் கரம் மற்றும் இனிப்பு கலந்து இருந்தால் அதன் சுவையே அலாதி தான். இந்த அதிரசத்துக்கு பெயர் தான் செட்டிநாடு அதிரசம்.

Order Chettinad Athirasam Online and get delivered in less than 24 Hours

இந்த இனிப்பான பலகாரத்தை எப்படி செய்வது என்று பாப்போம்:

தேவையான பொருட்கள்

அரிசி - அரை கிலோ
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய் சிறிதளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

அதிரசம் செய்முறை:

பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும். அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ளபோதே பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லப்பாகினை பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்) பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.

பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும். ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது. தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, எண்ணெய்யை ஒரு பேப்பரில் உறிஞ்சி எடுக்கவும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற சத்தான சுவையான இனிப்பு அதிரசம் தயார். மாவு கிளறியவுடன் அதிரசம் சுடுவதை விட இரண்டு நாட்கள் கழித்து அதிரசம் செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

என்னதான் நம் நாட்டு பெண்கள் சமையலில் கில்லாடியாக இருந்தாலும் விதம் விதமாக, வகை வகையாக சமைக்கத்தெரிந்தவர்களாக இருந்தாலும் ஒரு சில உணவுகளை செய்வதில் மட்டும் அவர்களுக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒருசின்ன தடுமாற்றம் இருக்கும். எத்தனை முறை செய்தாலும் சரியாக வராமல் போகிற குறிப்பிட்ட அந்த சில பலகாரங்களில்அதிரசத்துக்கே முதலிடம்.

இந்த செட்டிநாடு அதிரசத்தை எங்கே வாங்கி சாப்பிடுவது ? தரமானதாகவும் மற்றும் விலை கம்மியாக இருக்க வேண்டும் .. எங்கே வாங்குவது ? என்ன யோசிக்கிறீங்க.?

யோசிக்கவே வேண்டாம் .. இப்படி பட்ட பல சுவையான இனிப்பு பண்டங்கள் குறைவான விலையில் கிடைக்கும் ஒரே இடம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க

இங்கு வாங்கும் பொருள்களின் மீதும் அதன் தரத்தினை பற்றியும் உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், கவலை வேண்டாம். என்னென்றால், இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் உங்களுக்கு அந்த பொருளுக்கான தர சான்றிதழும் கூடவே அனுப்பப்படுகிறது.

நீண்ட தூர பயணமோ எப்பொழுது வரும்..? எப்படி வரும்..? என்றும் நீங்கள் யோசிக்க தேவையில்லை. nativcrush.com தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. அதனால், நீங்கள் வாங்கும் பொருள் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+