சுவையான செட்டிநாடு மில்க் பேடா இப்போது உங்களுக்காக ஆன்லைனில்!
எல்லா விதமான பண்டிகைகளிலும், ஒரு சில இனிப்பு வகைகள் மட்டுமே ஆஸ்த்தானமாக விளங்குகிறது. அதில் முக்கிய பங்கு விகிக்கிறது பாலில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள். பாலை சுண்ட காய்ச்சினால் கிடைக்கும் பால்கொவாவிற்கு நிகர் எதுவும் இல்லை. அதையே சற்று மைக்ரோவேவ் அடுப்பை உபயோகபடுத்தி செய்வது , மில்க் பேடா என்ற ஒரு ஒரு சுவையான இனிப்பு கிடைக்கும். பல வகையான மில்க் பேடா உள்ளது, அதில் ஒன்று தான் சுவையும், மனமும் சற்று தூக்கலாக இருக்கும் செட்டிநாடு மில்க் பேடா.
அது என்ன செட்டிநாடு மில்க் பேடாவிற்கு அப்படி ஊர் சிறப்பு ?
பாலில் தயாரிக்கப்படும் இனிப்பு தின் பண்டங்கள் எல்லாமே ஒரு வகையான பதத்தில் தான் செய்யப்படுகிறது. ஆனால் இந்த செட்டிநாடு மில்க் பேடா மட்டும் சற்று வித்தியாசமானது. சாதாரணமாக செட்டிநாடு உணவு வகைகள் என்றால் காரம் அதிகமாகவே இருக்கும், அதே போல் இங்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளும் கூட சிறந்த மனமும் சுவையும் சேர்ந்த ஒரு கலவை தான் . காரணம் அதற்க்கு அவர்கள் சமைக்க பயன்படுத்தும் சுத்தமான பொருட்கள் மற்றும் மில்க் பேடவிற்கு ஏற்றது போல் ஒரு வகையான பதம்.

செட்டிநாடு மில்க் பேடா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
மில்க் பவுடர் - 1 கப்
வெண்ணெய் -1/4 கப்
ஸ்வீட்டன்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 1 கேன் (396கிராம்)
சீனி - தேவைப்படும் அளவிக்கிற்கு
ஏலக்காய் தூள், முந்திரி சீவல், பிஸ்தா சீவல் - தேவைப்பாடு அளவிக்கிற்கு
செய்முற:
செட்டிநாடு மில்க் பேடா செய்வதற்கு இரண்டு படிகள் உண்டு. ஒன்று பால்கோவாவை ஒரு வித பதத்தில் தயார் செய்வது, மற்றொன்று அந்த கோவாவை நம் தேவைகேற்ப அளவுக்கு எடுத்து ஒரு சில விதிமுறைகளை கைபற்றி மைக்ரோவேவ் அடுப்பை உபயோகபடுத்தி செய்வது
பால்கோவா
மைக்ரோவேவ் அடுப்புகேன்றே ஒரு வகையான ஸேஃப் பாத்திரம் உள்ளது, அந்த பாத்திரத்தில் வெண்ணையை நன்றாக உருக்கிக்கொண்டு, அதனுடன் முதலில் பால் பவுடர் சேர்த்து கலக்கவும், சிறிது நேரம் கழித்து கண்டென்ஸ்ட் பாலையும் சேர்ந்து நன்றாக கலக்கவும்.
கலக்கியவுடன் 2 நிமிடதிருக்கு மிகை இல்லாமல் மைக்ரோவேவில் வைக்கவும். தற்பொழுது இந்த கலவை சற்றே இறுகியிருக்கும். மறுபடியும் ஸ்பூனால் நன்றாக கலந்து, 1 நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும். பால் கலவை நன்றாக இறுகி, உருட்டும் பதத்தில் இருக்கும். இப்பொழுது சுவையான பால்கோவா தயார்.
செட்டிநாடு மில்க் பேடா
தயார் செய்த இந்த பால்கோவை எடுத்து கொண்டு ஒரு வாணலியில் உதிர்ந்துக் கொட்டி, இளஞ்சூட்டில் கிளறிவிடவும். சூட்டில் கோவா உருகி சற்று நீர்த்தாற்போல் வரும். கிளறுவதை நிறுத்தி விட கூடாது, நன்கு இளகி வரும் வரை கிளறவும்.
பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, கோவாவை வாணலியின் ஓரங்களில் பரப்பிவிட்டு பிறகு கிளறவும். இப்பொழுது கோவா கட்டியாக இருக்கும். செட்டிநாடு மில்க் பேடாவிற்கு முக்கிய தேவையாக இருப்பது ஏலக்காய். இதை பயன்படுவத்தின் காரணம், ஏலக்காயில் பற்பல மருத்துவ தன்மைகள் நிறைந்த ஒரு பொருள். உடல் சூட்டை தணிக்கும், செரிமான மண்டலத்தை சீர் படுத்தும் மற்றும் என்னில் அடங்காத தன்மைகள்.
இப்பொழுது ஏலக்காயை நல்ல பொடியாக்கி, ஒரு மெல்லிய துளைகள் கொண்ட சல்லடையில் சலித்து, கோவாவில் கொட்டவும். அனைத்தையும் ஒன்று சேர கலந்து கொள்ளவும். பிறகு இவற்றை சிறு சிறு உருண்டைகளாக, சிறிய எலுமிச்சை அளவில் உருட்டி வைக்கவும்.
பிறகு மில்க் பேடாவிர்க்கு ஏற்றது போல் அந்த கோவா விற்கு வடிவம் கொடுத்து அதன் மீது சிறிது முந்திரி சீவல், பிஸ்தா சீவல் மேலாப்பில் தூவினால் சுவையான மில்க் பேடா தயார். இந்த செட்டிநாடு மில்க் பேடவை உங்கள் அன்புக்குரிவர்களுக்கு பரிமாறி உங்கள் அன்பை வெளிப்படுத்தி கொள்ளுங்கள்
இந்த செட்டிநாடு மில்க் பேடா செய்வதுற்கு பொறுமை மற்றும் சரியான பதம் என்று இந்த இரண்டும் இருந்தால்தான் செட்டிநாடு மில்க் பேடாவை சுவையை நாம் உணர முடியும். இப்பொழுது இருக்கும் இந்த அவசர கால கட்டத்தில் நாம் பொறுமையாக இருக்கவும் முடியாது அதுவும் சரியான பதத்தில் உள்ளதா என்ன கண்காணித்து கொள்ளவும் முடியாது. இதற்காக நீங்கள் பல ஸ்வீட் கடைகளில் ஏறி இறங்கி வண்ண வண்ண சாயம் பூசி குடுக்கப்படும் சுகாதாரம் இல்லாத அந்த மில்க் பேடா உட்கொண்டு வயிற்ருபோக்கு மற்றும் செரிமான பிரச்சனையை காசு குடுத்து வாங்குகிறீர்கள்
இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான பாலில் இந்த செட்டிநாடு மில்க் பேடாவை தயார் செய்வதால், நீங்கள் எதிர்பாரா அந்த சுவைவை நீங்கள் உணரலாம். மண்மணம் மாறாத செட்டிநாடு மில்க் பேடாவை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு வகை
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.












Click it and Unblock the Notifications