தேங்காய் பாலில் செய்த மஸ்கோத் அல்வா... நாங்க புதுசுங்கோ...

Subscribe to Oneindia Tamil

அல்வா சாப்பிடலாம்னு கேட்ட எல்லாரும் திருநெல்வேலி அல்வாவானு கேக்குறாங்க. இல்லங்க திருநெல்வேலில மட்டும் அல்வா பிரபலம் இல்ல. அதுக்கு போட்டியா இன்னொரு இடமும் இருக்குங்க. அதுதான் தூத்துக்குடி மாவட்டத்தில இருக்குற முதலூர். முதலுருனு சொன்னாலே கூட மஸ்கோத் அல்வானு வரும். ஆமாங்க, இப்போ முதலூர் மஸ்கோத் அல்வாவ பற்றிதான் தெரிஞ்சுக்கிட்டு ருசி பார்க்கப்போறோம்.

மஸ்கோத் அல்வா வாங்க..

இந்த முதலூர் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டத்தில் சிலம்பாட்டம், களியாட்டம் போன்ற ஆட்டங்களில் பிரபலம். இதுமட்டுமா..? இந்த முதலூர் பல்வேறு திருவிழாக்கள், விளையாட்டு போன்றவற்றிலும் பிரபலமாக உள்ளது. அவ்வளவுதானு நெனைச்சா இன்னொரு செய்தி இங்கதான் மஸ்கோத் அல்வா தயாரிப்ப ஒரு தொழிலாகவே செய்றாங்கன்னு. இந்த மஸ்கோத் அல்வா தமிழ் நாட்டில் மட்டுமில்லங்க உலக அளவில் மிகவும் பிரபலம்.

Order Mudalur Muscoth Halwa Chips Online and get delivered in less than 24 Hours

அல்வால இந்த மஸ்கோத் அல்வா மட்டும் எதுக்கு ஸ்பெஷல் தெரியுமா..? அல்வா நெய் அல்லது மற்ற எண்ணெய்களில் செய்யப்படும் ஒன்று. ஆனால், இந்த மஸ்கோத் அல்வா முழுக்க முழுக்க எண்ணெய் சேர்க்காமல் தேங்காய் பாலால் தயாரிக்கின்றனர். தேங்காய்பாலிலே முழுக்க முழுக்க செய்வதால் இந்த அல்வாவினை அதிக நாட்கள் வைத்து உண்ண முடியாது.

இந்த அல்வா முதன்முதலில் வளைகுடா நாட்டின் மஸ்கட்டில் இந்த அல்வா தேங்காய் பாலில் செய்யப்பட்டது. மஸ்கட் அல்வா காலபோக்கில் மஸ்கோத் அல்வா என அழைக்கப்பட்டது. இந்த அல்வா செய்ய மிகவும் பொறுமை தேவை.

பொறுமையை விட பக்குவமும் தேவை. இந்த அல்வாவில் அதிக வைட்டமின் சத்துகளை கொண்ட முந்தரி பருப்பும் இங்கு அதிகமாக சேர்க்கப்படுகின்றது. சில குழந்தைகள் பெரும்பாலும் முந்தரி பருப்பை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதனால் இந்த மஸ்கோத் அல்வாவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள் முகம் சுழிக்காமல் உங்கள் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.

இவ்வளவு பக்குவம் நிறைந்த இந்த மஸ்கோத் அல்வா எப்படி செய்யலாம்..!

தேவையான பொருள்:

1. மைதா : 1/2 கப்
2. தேங்காய் :1
3. சர்க்கரை : 1 1/2 கப்
4. முந்திரி துண்டுகள் : 10

இப்போ இத எப்படி செய்ய போறோம்னு பாக்கலாம்.

1. நீங்கள் அல்வா செய்வதற்கு முந்திய நாள் மைதாவை சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து தண்ணீரில் ஊற விட வேண்டும்.

2. பின்பு அதில் 3 கப் தண்ணீரை கூடுதலாக சேர்த்து பால் பத்திற்கு பிசையவும்.

3. பால் போன்று இருக்கும் மைதா தண்ணீரை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

4. மறுநாள் வடிகட்டிய பாலின் மேலோடோயை மட்டும் நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்.

5. தேங்காயை துருவி அதிலிருந்து 3 கப் வரை தண்ணீர் சேர்க்காமல் பாலை எடுத்து வைக்க வேண்டும்.

6. கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்துவைத்த தேங்காய்பால், சர்க்கரை, முந்திரி பருப்பு மற்றும் மைதா பாலினையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

7. தொடர்ந்து கெட்டிப்பதம் வரும் வரை கலக்கிகொண்டே இருக்கவும்.

8. தேங்காய்பாலில் இருக்கும் எண்ணெய் சூட்டில் வெளிவந்து அல்வா வேக சரியான பதத்திற்கு வந்துவிடும்.

9. தற்போது அல்வா சுருண்டு விடும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி தட்டில் பரிமாறலாம்.

இப்பொழுது சுவையான மஸ்கோத் அல்வா தயார்.

இவ்ளோ பாத்தும் இந்த அல்வாவ சாப்பிடாம இருந்த எப்படி..? உடனே ஆர்டர் போடுங்க ஸ்வீட்கானா.காம்-ல். எங்க இருக்கு, எப்படி இருக்கும்னு ஏதேனும் சந்தேகம் வருதா..? கவலைய விடுங்க. இந்த ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் வாங்கும் பொருள் நல்ல தரமானதாக உங்களுக்கு டோர் டெலிவரி செய்யப்படுகின்றது.

எல்லாரும் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்ட இந்த காலகட்டத்துல அல்வா செய்ய நேரம் இல்லையா..? இல்ல பக்குவம் வரலையா..? எல்லாரும் ரொம்ப சுலபமா முதலூர் மஸ்கோத் அல்வாவை வாங்கி சாப்பிட்டு அந்த ருசியில் முதலூருக்கே போற அளவுக்கு அவ்வளவு தரமான அல்வாவை உங்களுக்கு தருகின்றது ஸ்வீட்கானா.காம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+