நாங்க குடுக்கிறோம் அல்வா உங்களுக்கு அதும் திருநெல்வேலி அல்வா... ஆன்லைனில்

Subscribe to Oneindia Tamil

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பல உணவு பண்டங்களில் ஒன்று தான் இந்த அல்வா. அந்த அல்வாவில் சிறந்தது தான் திருநெல்வேலி அல்வா.

அல்வா என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும். அல்வா என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். இப்படி பட்ட அல்வா தென் இந்தியாவில் உள்ள திருநெல்வேலி அல்வா மிக பிரபலம்.

திருநெல்வேலி அல்வாவின் வரலாறு

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் பொழுது இந்த அல்வாவை முதன் முதலாக ருசித்துள்ளார். அதன் சுவைக்கு அடிமை ஆன அவர் அந்த அல்வா தயாரித்தவரை தன்னுடனே அழைத்து வந்து விட்டார்.

Order Srivilliputhur Palcova Online and get delivered in less than 24 Hours

அவர் மூலம் திருநெல்வேலிக்கு அல்வா தயாரிப்பு அறிமுகம் ஆனது. ஆனால் அவர் அங்கு தயாரித்த அல்வாவை விட திருநெல்வேலியில் தயாரித்த அல்வா அதை விடவும் ருசி அதிகமாக இருந்தது. இன்றளவும் இந்த அல்வாவின் ருசிக்கு தாமிரபரணி ஆற்று தண்ணி தான் காரணம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

நெல்லையில் நூறு வருடங்களுக்கு மேலாக இந்த அல்வாவிற்கு பெயர் பெற்ற ஒரே கடை திருநெல்வேலி இருட்டுக்கடை. இந்த கடையில் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரே ஒரு விளக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர், இதனால் இந்த கடைக்கு இருட்டு கடை என்று பெயர் வந்தது.

இன்றளவும் இவர்கள் வெறும் சாதாரண 40 வாட்ஸ் பல்பு ஒன்றை மட்டுமே பயன்படுத்தி விற்பனை செய்கிறார்கள். இருட்டுக்கடை அல்வா விற்பனை மற்ற கடைகளை போல முழு நேர விற்பனை கிடையாது.

மாலை 6 மணிக்கு விற்பனை தொடங்கும் முன் 4 மணி முதலே மக்கள் வரிசையில் நிற்க தொடங்கி விடுவார்கள். அதிகபட்சம் 8 அல்லது 9 மணி வரை மட்டுமே விற்பனை நடைபெறும்.

இந்த திருநெல்வேலி அல்வாவை செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

சம்பா கோதுமா - 100 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
நெய் - 100 மில்லி லிட்டர்
ஆலிவ் எண்ணெய் - 25 மில்லி லிட்டர்

செய்முறை

நல்ல தரமான சம்பா கோதுமையை எடுத்து கொண்டு, அதை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் பிறகு அதை நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்து கொண்டு அதை நன்றாக வடி கட்டி கொள்ள வேண்டும். சிறிது அளவு தண்ணீர் ஊற்றிக்கொண்டு அந்த கோதிமையில் தேவையான அளவு பாலை முடிந்த அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

இரண்டு மணி நேரத்துக்கு பிறகு நல்ல கெட்டியான பால் கீழே தங்கி விடும், லேசான பால் மட்டும் மேலே இருக்கும். பிறகு லேசான பாலை கீழே ஊற்றி விட்டு, கெட்டியான பாலை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு டம்பளர் கெட்டியான பாலுக்கு நான்கு டம்பளர் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். இப்பொழுது கோதுமை பால் தயார்

இந்த கோதுமை பாலை அடுப்பில் வைக்கவேண்டும். பிறகு நன்றாக கிளற வேண்டும். அதன் பிறகு ஆலிவ் எண்ணெய்யை ஊற்றவேண்டும்
ஒரு தனி கிடாயில் சர்க்கரையை நன்றாக உருக வைக்க வேண்டும். அதன் பிறகு இவை இரண்டையும் சேர்க்கவேண்டும். பிறகு நன்றாக கிளற வேண்டும். சரியான பக்குவம் எப்பொழுது வரும் என்றால் அது கண்ணாடி மாதிரி வழ வழ என்ன வரும்போது தான். இப்பொழுது சூடான திருநெல்வேலி அல்வா ரெடி

இப்படிப்பட்ட சுவையான திருநெல்வேலி அல்வாவை தங்கள் இல்லங்களில் செய்வது மிகவும் கடினம். இதை செய்ய வேண்டும் எனில் பொறுமை மிகவும் அவசியம். ஆனால் இப்பொழுது இருக்கும் அவசர உலகில் அது முடியாது. கண்ட கடைகளில் விற்கப்படும் போலியான அல்வாவை உண்டு உடல் கேட்டுபோவதர்கான வாய்புகள் உண்டு

ஆனால் நம் உடல் நலத்தையும், ஆரோக்யத்தையும் கணக்கில் கொண்டு நமக்கு தரமான முறையில் இந்த திருநெல்வேலி அல்வாவை
தருவது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான். இப்படி பட்ட பல சுவையான இனிப்பு பண்டங்கள் குறைவான விலையில் கிடைக்கும் ஒரே இடம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க

இங்கு வாங்கும் பொருள்களின் மீதும் அதன் தரத்தினை பற்றியும் உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், கவலை வேண்டாம். என்னென்றால், இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் உங்களுக்கு அந்த பொருளுக்கான தர சான்றிதழும் கூடவே அனுப்பப்படுகிறது. நீண்ட தூர பயணமோ எப்பொழுது வரும்..? எப்படி வரும்..? என்றும் நீங்கள் யோசிக்க தேவையில்லை. nativcrush.com தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. அதனால், நீங்கள் வாங்கும் பொருள் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.

எலேய் ஒரு தடவ வாங்கி பாரு லே நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) லே, அப்பறம் வாங்கி கிட்டே இருப்பீங்க. எலேய் மிஸ் பண்ணிடாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+