தித்திக்கும் தேன் மிட்டாய் ரசிச்சு ருசிச்சு சாப்பிடனுமா?
தேன் போன்ற இனிமையான நினைவுகளை நம்மிடையே மீண்டும் கொண்டு வருவது தேன் மிட்டாய். எவ்வளவோ தின்பண்டகளை இன்று நாம் ருசித்தாலும் எவ்வளவு தான் விலை அதிகமான ருசியான தின்பண்டங்களை ருசித்தாலும் இந்த தேன் மிட்டாயை இன்றளவும் நினைத்த உடன் நம் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிட்டாய் - நமக்குந்தான். சிறுவயதில் இந்த தேன் மிட்டாய் தேனிலே செய்தது என்று நம்பியதாலும், சர்க்கரை பாகை தேன் என்று நினைத்து ரசித்து அதை ருசித்தும் நம் மனதில் அந்த ருசியான தேன் மிட்டாய் நீங்கா இடம் பிடித்தது. அது மட்டும் இல்லாமல் நம் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ட தின்பண்டகளில் தேன் மிட்டாயும் ஒன்று. அதே போல் நம்மிடம் இருக்கும் 50 பைசாவிற்கு கை நிறைய தேன் மிட்டாய் வாங்கி சட்டை பையிலே போட்டு ருசித்தும் ஒரு காலம் நெஞ்சில் நிற்கும் அந்த காலம் மீண்டும் வருமா என்பது ஏக்கமே.

ருசியான தேன் மிட்டாய் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
மைதா - 1கிலோ
தயிர் - 1கப்
சர்க்கரை - 1 1/2 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மைதா, தயிர், தேவையான கலர், மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசையவும். பின்னர் அதை 3 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகை நன்கு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சி வைக்கவும்.
ஊறவைத்த மாவு நன்கு ஊறியதும் அதனை தேவையான அளவில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பொரித்த உருண்டைகளைச் சர்க்கரை பாகு சூடாக இருக்கும் பொழுது அதில் போடவும். சிறிது நேரம் ஊறிய பின் எடுத்து உலர விடவும். சுவையான ருசியான தேன் மிட்டாய் ரெடி.
இதை கருத்தில் கொண்டு, நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) உங்களுக்கு சுவையான தேன் மிட்டாயை தயார் செய்து உங்கள் வீடு தேடி வந்து தருகிறது. நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் உடனே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com).
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.
எலேய் ஒரு தடவ வாங்கி பாரு லே நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) லே, அப்பறம் வாங்கி கிட்டே இருப்பீங்க. எலேய் மிஸ் பண்ணிடாதீங்க அப்பறம் வருத்த்படுவீங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications