முந்திரியின் சத்துக்கள் நிறைந்த மக்ரூன்.. இப்போது ஆன்லைனில்.. நாங்க புதுசுங்கண்ணா
ஒருவழியா நவராத்திரி வந்துருச்சு முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கு. நவராத்திரி முடியுதுன்னு பார்த்த பின்னாடியே தீபாவளி வருது. அப்போ இன்னும் இருபது நாளைக்கு வீட்டுல ஸ்வீட் மழை தான் போங்க.. அந்த ஸ்வீட் மழைல ஸ்வீட்கானா.காம்-ன் ஸ்வீட் இல்லாம எப்படி..?
வாங்க இங்க இருக்குற ஒரு ஸ்வீட் பற்றி தெரிஞ்சுக்கலாம். மக்ரூன் தெரியுமா உங்களுக்கு..? கேள்வி சில்லி தனமா இருக்குல..? பரவாயில, உங்களுக்கு மக்ரூன் தெரியும். ஆனா, மக்ரூன்ல எவ்ளோ வகைகள் இருக்குனுத் தெரியுமா? அதையும் பாக்கலாம் வாங்க.

1. கிளாசிக் பிரஞ்ச் மக்ரூன் : இதை வெண்ணிலா கிரீமில் செய்யப்படுவது.
2. ஹார்மோனி மக்ரூன் கேக் : இதனை முழுக்க முழுக்க ஸ்ட்ராபெர்ரி பலங்களில் செய்யப்படுவது.
3. மின்ட் மக்ரூன் : டார்க் சாக்லேட் மற்றும் புதினாவுடன் வெண்ணிலா கிரிமில் செய்வது.
4. லேவண்டர் மக்ரூன் : இது சாக்லேட் மற்றும் லேவண்டர் ப்லவருடன் செய்வது.
5. கோகனட் பேசன் பிருட் மக்ரூன் : தேங்காய், பழங்கள், மற்றும் தயிரின் ருசியை தழுவியது.
6. ஐஸ் கிரீம் மக்ரூன் : ஐஸ் கிரீம் போன்றே தயாரிக்கப்படுவது.
7. பிஸ்தா மற்றும் திராட்சை மக்ரூன் : பிஸ்தா மற்றுஜ்ம் திராட்சை பழங்களில் செய்யப்படும் மக்ரூன்.
8. இது மட்டும் இல்லை கேட்பெரிகிரீம் முட்டை மக்ரூன், ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை மக்ரூன், பட்டர் கிரீம் மக்ரூன், பீனட் பட்டர் மக்ரூன், ஸ்டாபெர்ரி மக்ரூன், மக்ரூன் மில்க்ஷேக் என அடுக்கிகொண்டே போகலாம் மக்ரூன் வகைகளை..
மற்ற ஊருகளை விடுங்க நம்ம ஊருக்கு நம்ம மண்ணுக்கு வாங்க தூத்துக்குடி எதுக்கு பிரபலம்னு பார்த்த முதல வருவது உப்பு, அடுத்து அருவா கூட வரும்ங்க..! சோ பி கேர் புல்.. ஏதுவா இருந்தா நமக்கு என்ன நமக்கு சாப்புடுறது தான் முக்கியம். ஆமா தூத்துக்குடில மக்ரூன் ரொம்ப பிரபலம். இதே ருசி மதுரைல சில இடங்களில் மட்டும் கிடைக்கும். இந்த ருசிய கொண்டு வருவது ரொம்ப கஷ்டம்.
இவ்ளோ கஷ்டமான மக்ரூன எப்படி செய்யலாம்னு பாக்கலாமா..?
இதற்க்கு தேவையான பொருள்னு பார்த்த ரொம்ப கம்மி தான்.
1. மஞ்சள் நிற கருவை நீக்கிய முட்டை : 4
2. சர்க்கரை : 3/4 கப்
3. முந்திரி பருப்பு : 1 கப்
4. வெண்ணெய் (இருந்தால்) : 1 ஸ்பூன்
அவ்வளவுதாங்க ரொம்ப கம்மிய இருக்குல. சரி இதோட செய்முறைய பார்க்கலாம்.
1. கரு நீக்கிய முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கெட்டி படும் வரை நன்கு கரைக்கவும்.
2. இன்னொரு புறம் முந்திரி பருப்பையும், சர்க்கரையையும் தனித்தனியாக மிக்ஸ்யில் போட்டு அரைத்து கொள்ளவும்.
3. நன்கு அடித்து வைத்துள்ள முட்டையில் சர்க்கரையை போட்டு 30 முதல் 35 நிமிடம் வரை நன்கு அடித்து கிரீமாக வரும் வரை கலக்கவும்.
4. அதனுடன் அரைத்து வைத்த முந்திரியை 15 நிமிடம் வரை நன்றாக கலக்கவும்.
5. இதனை ஓவனில் 150° செல்சியஸ்-ல் சூடேற்ற வேண்டும்.
6. பின்பு ஒரு தட்டில் வெண்ணெய்யை உருக்க்கவும்.
7. அதனை பிழிவதில் தடவி மக்ரூனுக்கு செய்து வைத்த கலவையை அதனுள் வைத்து கோன் போன்ற வடிவில் பிழியவேண்டும்.
8. பிழிந்து வைத்த மக்ரூன் உள்ள தட்டினை 12 முதல் 15 நிமிடம் வரை ஓவனில் வைத்தால், அது தன நிறம் மாறி முறுமுறுவென மாறும்.
9. அத்துடன் மக்ரூனை வெளியில் எடுத்து வைக்கலாம்.
10. தற்போது சுவையான மக்ரூன் தயார். உங்கள் குழந்தைகளுடன் நீங்களும் சுவைத்து மகிழலாம்.
மக்ரூன் வகைகளையுன் பார்த்தாச்சு, அதோட செய்முறையையும் பார்த்தாச்சு இப்போ இத வாங்கி சாப்பிடுவது மட்டும் தான் மிச்சம். என்ன யோசிக்கிறீங்க.? எப்படி வாங்குறதுனா..? அந்த கவலை உங்களுக்கு எதுக்கு? ஸ்வீட்கானா.காம் இருக்கும் பொழுது. இங்கயே நீங்க உங்களுக்கு பிடித்த உங்க மண்ணோட ருசி வாய்ந்த மக்ரூன வாங்கி ருசித்து அந்த ருசியுடனே உங்க நவராத்திரி மற்றும் தீபாவளிய இன்னும் சிறப்பா கொண்டாடுங்கள்..












Click it and Unblock the Notifications