சுவையான தூத்துக்குடி மக்ரூன் இப்போது ஆன்லைனில்!
உப்பு என்ற பெயர் கேட்டாலே, நாம் எல்லோருக்கும் ஞாபகம் வருவது, தூத்துக்குடி என்ற மாவட்டம். ஆனால் நம் யாவருக்கும் தெரியாத ஒரு இனிப்பு பண்டம் இங்கே தயாரிக்கபடுகிறது. அது தான் மக்ரூன். மிகவும் சுவையான மற்றும் தரமான மக்ரூன் இந்த தூத்துக்குடி மண்ணில் மட்டும் தான் கிடைக்கும்
தூத்துக்குடி மக்ரூனின் வரலாறு:
போர்த்துக்கீசியர்கள் நம் இந்தியாவில் அமைந்துள்ள கடல் பகுத்து மாவட்டங்களையே ஆண்டு வந்தனர். அவர்கள் வந்ததும் போக, அவர்களது பழக்க வழக்கங்கள் மற்றும் சமையல் நுணுக்கங்கள் யாவையும் சேர்த்து நம் கடலோர மண்ணுக்கு தரை வார்த்து கொடுத்தனர். அவற்றில் ஒன்று தான் இந்த மக்ரூன் என்னும் சுவையான இனிப்பு பண்டம்

மக்ரூன் என்பது என்ன?
மக்ரூன் என்பது ஒரு போர்த்துக்கீசிய சொல். அதன் அர்த்தம், 'முந்திரியும் முட்டையும் கலந்த இனிப்பு'. தூத்துக்குடியை ஆண்டு வந்த போர்த்துக்கீசிய மன்னர்கள் பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து கொல்லம் வழியாக கப்பல் களில் முந்திரிக்கொட்டைகளைக் கொண்டுவந்து ‘மக்ரூன்' செய்து சாப்பிட்டார்கள். கொல்லம் வழியா வந்ததால் முந்திரிக்கொட்டையை தூத்துக் குடி, குமரி மாவட்ட மக்கள் ‘கொல்லாக்கொட்டை' என்றும் அழைப்பார்கள் .
மக்ரூன் செய்வது எப்படி?
செய்ய தேவையான பொருட்கள்:
இந்த பொருட்கள் வெறும் 1 கிலோ மகரூன் செய்வதற்கு மட்டுமே உதவும்
சர்க்கரை - 1 கிலோ
முந்திரி - அரை கிலோ
முட்டை - 12 - 15 நாட்டுகோழி முட்டை
செய்யும் முறை :
முதலில் முந்திரி மற்றும் சர்க்கரையை நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளை கருவை மட்டும் கவனமாக பிரித்து எடுக்க வேண்டும். பின்பு அதை நன்றாக அடித்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவை தான், மக்ரூனின் மேன்மையை தீர்மானிப்பது.
இதை அடிக்க அடிக்கஅடிக்க அடிக்க குப்பென மேலெழுந்து நுரை ததும்பும். சர்க்கரையை கொட்டி, திரும்பவும்அடிக்கவும் . பின், முந்திரிப் பவுடரை கொட்டி மிதமான பதத்தில் பிணைக்கவும் . பிறகு ஒரு பேப்பரை சுருள் பொட்டலம் போல போட்டுக் கொண்டு, அதற்குள் மாவை அள்ளிவைத்து, கீழ்பாகம் வழியாக மாவால் கோலம் போட, சுருள் வடிவத்தில் கீழே பரவுகிறது மாவு.வடிவம் கிடைத்ததும், பேக்கரி அடுப்பின் மேல்தளத்தில், மிதமான சூட்டில் மக்ரூன் தட்டுக்களை அடுக்கி காயவைக்கிறார்கள். ஒரு இரவு முழுதும் காய்ந்தால் "மக்ரூன்" ரெடி.
உலகத்தில் பல வகை மக்ரூன்கள் இருந்தாலும், தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் மக்ரூனில்தான் அந்த சுவை, மனம் மற்றும் சுகாதாரம் இருக்கும். உலகம் முழுவதும் இங்கு இருந்துதான் ஏற்றுமதி ஆகிறது.
மக்ரூனுக்கு வடிவம் வார்ப்பதுதான் முக்கியம். கைதேர்ந்தவர்களுக்குத்தான் இது சாத்தியப்படும். ஆனால் இப்பொழுது இருக்கும் இக்காலத்து பெண்கள், வீட்டு வேலை பார்த்துகொண்டு அலுவலக வேலையும் பார்த்து கொண்டு இந்த மக்ரூனை அவ்வளவு நேர்த்தியாக செய்ய முடியாது. அதற்காக கண்ணில் பட்ட கடைகளுக்கு சென்று பழசோ புதுசோ என்று பாராமல் இந்த மக்ரூனை வாங்கி உண்டு அதனால் உடல் நிலையை நீங்களே கெடுக்காதீர்கள்
இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான, சுவையான, சுகாதாரமான, இந்த தூத்துக்குடி மக்ரூனை, தூத்துக்குடியில் தயாரிப்பதை போன்ற நேர்த்தியான முறையில் தயார் செய்கிறார்கள். மண்மணம் மாறாத இந்த தூத்துக்குடி மக்ரூனை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு பண்டம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications