அடி தூள்.. 10 தொகுதிகளுக்கு அடித்த ‘ஜாக்பாட்’! மினி ஸ்டேடியம் அமைக்க உடனே அனுமதி! அட அவங்க ஏரியாவா?
சென்னை : தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. கொளத்தூர், சேப்பாக்கம், திருவெறும்பூர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டத்திலேயே, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோரின் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி அன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

அப்போது விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறையில் 31 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டது. இதில், 61 தொகுதிகளில் ஏற்கனவே விளையாட்டு அரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுதவிர தமிழ்நாட்டில் மீதமுள்ள 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்குகள் நிறுவப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியங்கள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பனி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெரும்பூர், ஸ்ரீவைகுண்டம், பத்மநாதபுரம், ஆலங்குடி, காரைக்குடி ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளில், மினி ஸ்டேடியம் அமைக்க நிர்வாக அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்காக தலா 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மினி விளையாட்டரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டத்திலேயே முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன், மனோ தங்கராஜ், சிவ வீ மெய்யநாதன் ஆகியோரின் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக எம்.எல்.ஏ இருக்கும் ஒரு தொகுதிக்கும் இந்த முதற்கட்ட திட்டத்தில் மினி ஸ்டேடியம் கிடைத்துள்ளது.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு 2026! விடுபட்ட அனைத்து நில அளவை எண்களுக்கும் மாற போகும் புதிய ரூல்ஸ்












Click it and Unblock the Notifications